குழந்தைகளுக்கான பயண விதிகளில் மாற்றமில்லை: இந்திய ரயில்வே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

குழந்தைகளுக்கான பயண விதிகளில் மாற்றமில்லை: இந்திய ரயில்வே

புதுடில்லி. ஆக.19 ரயிலில் பயணிக்கும் குழந்தை களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை' என, இந்திய ரயில்வே நேற்று  முன்தினம் (17.8.2022) அறிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியிட்ட அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாகப் பயணிக்க லாம். இந்நிலையில், 5 வயதுக்குட்ட குழந்தை களுக்கும் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது

இது குறித்து ரயில்வே நிர்வாகம்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் பயணிக் கும் குழந்தைகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய் வது தொடர்பான விதியை, இந்திய ரயில்வே மாற்றி யுள்ளதாக சமீப காலமாக சில ஊடகங்களில் செய் திகள் வந்தன. அவற்றில் உண்மை இல்லை.

ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதில் இந்திய ரயில்வே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 5 வயது வரையிலானோர் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. அதே சமயம், அவர்களுக்கு தனியாக 'பெர்த்' தேவைப்படும் பட்சத்தில், வயது வந்தோருக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment