கரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

கரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக.2- தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விக் கட்ட ணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் நலன் கருதி ஒன்றிய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்த குமார்,  அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ‘கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்விக்கட்டணம் பெறுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். அனைத்து பள்ளிகளும் கருத்துருவை அனுப் பியதை உறுதிப்படுத்தவும் , அதனைத் தொடர்ந்து கண் காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment