நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்... விடுதலை சந்தாவோடு தோழர்களுக்கு பயனாடை அணிவித்து மக்கள் நெகிழ்ச்சி.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்... விடுதலை சந்தாவோடு தோழர்களுக்கு பயனாடை அணிவித்து மக்கள் நெகிழ்ச்சி....

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணியைப் பாராட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தா வழங்கப் படும் என தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படை யில் தமிழ்நாடு முழுவதும் கழகப் பொறுப்பா ளர்கள், தோழர்கள் இலக்கை அடைய இடை விடாது உழைத்து வருகின்றனர். இந்நிலையில், இனத்தின் மானத்தை காக்கும் பேராயுதமும் - போராயுதமுமான விடுதலைக்கு சந்தா  திரட்ட கடை வீதியில் நன்கொடை கேட்டு நானே வரு கின்றேன் என்று தமிழர் தலைவர் அவர்கள் தஞ்சை கடை வீதிகளில் ஆக. 20 அன்று வலம் வந்தார்.

அதே நேரத்தில் விருத்தாசலம் கடைவீதி களில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கடை வீதிகளில் நன் கொடை திரட்டும் பணியை மாவட்டத் தலை வர் அ.இளங்கோவன் தலைமையிலும், மாவட் டச் செயலாளர் ப. வெற்றிச்செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் முன்னிலையிலும் தொடங்கி வைத்தார்.  விருத் தாசலம் வணிகர்கள் - பொதுமக்கள் - அரசியல் கட்சித் தோழர்கள் ஆர்வமுடன் சந்தாக்கள் அளித்ததோடு மட்டுமல்லாமல் பயனாடை களையும் அணிவித்து, எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் தொண்டுக்கு எங்களின் சிறிய பங்களிப்பு என்று வாழ்த்தி அனுப்பினர்.

பொதுக்குழு உறுப்பினர் தங்க .ராச மாணிக்கம், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், நகரச் செயலாளர் த.சேகர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராம ராஜ், புலவர் இராவணன் ஆகியோர் சந்தா சேர்ப்பு பணியில் உடனிருந்தனர்.

சந்தா அளித்தோர் விவரம் வருமாறு:

எழுத்தாளர் இமையம் -  ஆயுள் சந்தா - 20000, விருத்தாசலம் நகர் மன்றத் தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் - ஆயுள் சந்தா - 20,000, அருணா நகலகம் செல்வ விநாயகம் - 1 ஆண்டு சந்தா - 2000, அண்ணாமலை டிரேடர்ஸ் - 1 ஆண்டு சந்தா - 2000, கங்கை அமரன் சைக்கிள் மார்ட் - 1 ஆண்டு சந்தா - 2000, திமுக நகரச் செயலாளர் க.தண்டபாணி 1 ஆண்டு சந்தா - 2000, கதிரவன் பூக்கடை - திமுக வணிகரணி துணை அமைப்பாளர் - 1 ஆண்டு சந்தா 2000, பாமக நகர்மன்ற உறுப்பினர் ச.சிங்காரவேல் 1 ஆண்டு சந்தா - 2000, பழனியப்பா ஜூவல்லரி - 1 ஆண்டு சந்தா - 2000, வசந்த் மெடிக்கல் - 1 ஆண்டு சந்தா 2000, சாலை அச்சகம் வேலு -அரை ஆண்டு சந்தா - 1000, செந்தில் மளிகை - அரை ஆண்டு சந்தா - 1000, சபரி எலக்ட்டிரிகல்ஸ் - அரை ஆண்டு சந்தா - 1000, திமுக மாவட்டப் பிரதிநிதி இளவரசன் - அரை ஆண்டு சந்தா - 1000, காவல் உதவி ஆய்வாளர் ஓய்வு பூமாலை -அரை ஆண்டு சந்தா - 1000, ஆயுள் சந்தா- 2, ஆண்டு சந்தா - 8, அரையாண்டு சந்தா - 5, மொத்தத் தொகை - 61,000.

No comments:

Post a Comment