யார் சிறந்த ‘இந்து?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

யார் சிறந்த ‘இந்து?'

இந்து வேதங்களின்படி, மாட்டிறைச் சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்து வாக இருக்க முடியாது! - விவேகானந்தர். (The Collected Works of Swami Vivekanand, vol.3, p.536)

பெண்களின் திருமண வைபவங் களில் பசு மாட்டையும் காளை மாட்டை யும் அறுக்க வேண்டும் - ரிக்வேதம் (10:85:13)

இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகிய னவாம். - ரிக்வேதம் (6:17:1)

“பரோபகரம் இடம் சரீரம்“ என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ்வுடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே - பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை .)

உண்ணுபவர்களையும் உணவுகளை யும் பிரம்மனே படைத்தான்.   - மனுஸ்மிருதி (பாகம் 5:வசனம் 30)

அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன். 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனுஸ்மிருதி (பாகம் 5:வசனம் 35)

ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார். - வசிஷ்டமுனிவர் (11:34)

விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1:3:10)

மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கி றேன்.

இராமாயணத்தின் மகரிசி  யாக்ஞவல் கியர் (சீதையின் தந்தை குரு) சத்பத்பிராம ணம்.

அம்பேத்கர் எழுதிய ‘Did the Hindus never eat beef?‘  நூலிலிருந்து சில பகுதிகள்

- தந்தை பெரியார் பிறந்த நாள் மலர், 2019

No comments:

Post a Comment