பெரியகுடி எண்ணெய் கிணற்றை உடனே மூட வேண்டும் ஓஎன்ஜிசிக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

பெரியகுடி எண்ணெய் கிணற்றை உடனே மூட வேண்டும் ஓஎன்ஜிசிக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

திருவாரூர்,ஆக.14 திருவாரூர் மாவட்டம், பெரியகுடியில் இருக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை உடனடியாக மூட வேண்டும். அதில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா எண்ணெய், பாறைஎரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதிக்க கூடாது என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதன் விளை வாக கடந்த 2020-ஆம் ஆண்டு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி. புதிய கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது  காவிரி டெல் டாவில் பல இடங்களில் மூடப்பட் டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே யுள்ள பெரியகுடி என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்தாலோசனை கூட் டம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து விவசாய சங்க தலைவர் 

பி.ஆர்.பாண்டியன் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். அதற்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் ஆதரவு கோரியிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனையும் சந்தித்து பெரியகுடி கிணற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். மூட உத்தரவிடப்படும் என்று அப்போது அவர்கள் உறுதியளித்திருந்தனர். 

இந்நிலையில் பெரியகுடி எண் ணெய் கிணறு சம்பந்தமான கருத்து கேட்பு கூட்டம் முதலில் ரத்து செய் யப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக தற்போது எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `பெரிய குடி ஓஎன்ஜிசி எண் ணெய் கிணற்றில் வேறு எவ்வித பணி களும் மேற் கொள்ளக்கூடாது. நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment