குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்

தூத்துக்குடி,ஆக.14- "குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். 

இந்தியாவின் அனைத்து விண் வெளி திட்டங்களும் சிறீஅரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட் டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறி யப்பட்டது.  இதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலமும், மீதம் உள்ள பட்டா நிலமும் கையகப் படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்வதற்காக 11.8.2022 அன்று குலசேகரன்பட்டினம் வந்தார். சிறீஅரிகோட்டா விண்வெளி மய்ய விஞ்ஞானிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் குலசேகரன் பட்டினம் கூடல்நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

எந்த பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். 

பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறீஅரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக 2ஆவது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் அமைந்து உள்ளது. இந்த பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இங்கு ஆய்வு மேற் கொண்டதில் முழு திருப்தியாக உள்ளது. குலசேகரன் பட்டினத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக உள்ளது. 100 சதவீதம் நிலம் கையகப் படுத்தப்பட்டு ஒப்படைக் கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டி உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.  இங்கு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து குடியிருப்புகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகையால் சிறிய வகை ராக்கெட்டுகளான எஸ்.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்து வதற்கு உகந்ததாக உள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் அடுத்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment