அரியலூரிலே ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள் அரியலூர் மாநாட்டு காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியரின் பெருமித உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

அரியலூரிலே ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள் அரியலூர் மாநாட்டு காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியரின் பெருமித உரை

 திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள் வழிகாட்டுகின்ற 

நெறிமுறைகளாக அமைந்திருக்கின்றன

அரியலூர், ஆக.1- திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வழிகாட்டு கின்ற நெறிமுறைகளாக அமைந்திருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நடைபெற்ற பட்டிமன்றத்தை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகத்தி னுடைய துணைத் தலைவர் உள்பட, கழகப் பொறுப் பாளர்களே, மாநாட்டிலே கலந்துகொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழக இளைஞர்களான செயல் வீரர்களே, பல்வேறு பகுதிகளிலிருந்து - மாநிலம் முழுவதும் இருந்து திரண்டு வந்திருக்கக்கூடிய பெரியோர்களே, தோழர்களே, தாய்மார்களே, கழகக் கொள்கை உறவு களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சனாதனம் சர்ப்பமாக படமெடுத்து ஆடக்கூடிய நிலையில், அதனுடைய விஷப் பல்லைப் பிடுங்குவதற்கு ‘விடுதலை’தான் ஒரே ஆயுதம்!

மதுரையில் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் எடுத்த முடிவிற்கேற்ப, அறிவாசான் தந்த பேராயுதமான ‘விடுதலை' எல்லா பகுதிகளிலும் அதனுடைய கருத் துகள் பரவவேண்டும்; மதவாதத்தை வீழ்த்துவதற்கு அதுதான் ஒரே ஆயுதம். சனாதனம் சர்ப்பமாக பட மெடுத்து ஆடக்கூடிய நிலையில், அதனுடைய விஷப் பல்லைப் பிடுங்குவதற்கு ‘விடுதலை'தான் ஒரே ஆயுதம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, மிகச் சிறப்பான வகையிலே, கழகத் தோழர்கள் ஆங்காங்கே நேரம் காலம் பார்க்காமல், ‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்'' என்று சொல்லக்கூடிய அளவில் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தோழர்கள், தொடர்ந்து இங்கேயும் ‘விடுதலை’ சந்தாக்களை ஏராளமாக வழங்கியிருக்கிறார் கள். அவர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றி யையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய திருப்பு மய்யமான ஒரு பணி!

அடுத்து நண்பர்களே, இன்னும் இந்தப் பணி தொடரவேண்டும்; தொடரும். எல்லா தோழர்களும் வயது இடைவெளியில்லாமல் உற்சாகமாகப் பணி யாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுவதோடு,  இது நம்முடைய இயக்கத்தில் ஒரு புதிய திருப்பு மய்யமான ஒரு பணியாகும்.

எனவே, இதைப்பற்றி மாலையில் விரிவாக சொல்கிறேன். நேரம் நெருக்கடியாக இருக்கின்ற காரணத்தினால், ஒரு சில கருத்துகளை மட்டும் இங்கே விளக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

சற்று நேரத்திற்கு முன்பு, நம்முடைய அருமை நண்பர் திருப்பூர் மணிவண்ணன் அவர்களும், சங்கர் அவர்களும் மிக அருமையாக நம்முடைய இளை ஞர்களை, மாணவச் செல்வங்களையெல்லாம் வைத்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். யோகா என்ற கலையை வைத்துக்கொண்டு, பெரிதாக ஏதேதோ காட்டுகிறார்கள்.

ஒரு தவறான பிரச்சாரத்தை ஆழமாகத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்!

ஆனால், உண்மையில், மூச்சுப் பயிற்சி, நல்ல உடற்பயிற்சி என்று சொல்லக்கூடிய இந்தப் பயிற்சிகள் என்பது இருக்கிறதே - இது ஏதோ வடமொழியிலிருந்து, பதஞ்சலி என்ற ஒருவர் உருவாக்கியதிலிருந்துதான் வந்தது என்பது போன்ற ஒரு மாயையை - ஒரு தவறான பிரச்சாரத்தை ஆழமாகத் திட்டமிட்டு செய்திருக் கிறார்கள்.

ஆனால், நண்பர்களே, இதைப்பற்றி முழுமையாகச் சொல்லுகின்ற நேரத்தில், ‘உண்மை' இதழிலும், ‘விடுதலை’யிலும் தெளிவாக வெளிவரும்.

யோகா என்பது தமிழரின் வாழ்வியல் கலை. 

யோகா  என்றால் அலைபாயும் மனதை அலையாமல் நேர்வழிபடுத்தும் செயலாகும் என்று எழுதிக் கொடுத் திருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் ஆசனங்கள் என்றெல்லாம் போட்டி ருக்கிறார்கள். அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், அதைப்பற்றி விளக்கமாக சொன்னால் நேரமாகும் என்பதால், இரண்டே இரண்டு செய்திகளை மட்டும் இந்த அறிவார்ந்த அவைக்குச் சொல்கிறேன்.

பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பதுதான் நம்முடைய இயக்கம். திராவிட சமுதாயத்தில் நிலவி இருந்த ஆரம்ப கால பண்பாட்டுப் பழக்க வழக்கங் களையெல்லாம், ஆரியம் உள்ளே வந்து நுழைந்தவுடன், அந்த படையெடுப்பிலே மிகமிக முக்கியமான படையெடுப்பு பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, கல்வியைக் கொடுக்காமல் தடுத்தார்கள்

மொழியை அழித்தார்கள்; கலையை அழித்தார்கள்; இலக்கியத்தைப் பறித்தார்கள். இப்படி எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, கல்வியைக் கொடுக்காமல் தடுத்தார்கள். மீறிப் படித்தால் தண்டனை உண்டு என்று சொன்னார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரண்டு செய்திகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

இங்கே பிள்ளைகள் மிக அற்புதமாக செய்துகாட்டினார்கள்; நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குக் காரணம் நம்முடைய தோழர்கள் மணிவண்ணன் அவர்களும், சங்கர் அவர்களும் - இதுபோன்ற கருத்தைச் சொன்னவுடன், நடைமுறையில் அதைச் சொல்லவேண்டும் என்றோம்.

திராவிட நாகரிகத்தில், மூச்சுப் பயிற்சியும், உடற்பயிற்சியும் அப்படியே சிற்பங்களாக அடித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்

நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டி ருக்கிறோம், இந்தக் கலை எங்கிருந்தோ இறக்குமதி ஆகியிருக்கும் என்று நினைத்திருந்தோம். அப்படி யில்லை, சிந்துவெளி நாகரிகம் என்று சொல்லக் கூடிய திராவிட நாகரிகத்தில், இந்த மூச்சுப் பயிற் சியும், உடற்பயிற்சியும் அப்படியே சிற்பங்களாக அடித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்திருக்கிறார்கள். இப்பொழுது இல்லை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு.

நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள் கூட, நம்மு டைய தமிழ்ச்சொற்களையெல்லாம் அவர்கள் திரும்பத் திரும்ப தங்களுடையதாக்கிக் கொண்டார்கள் என்ப தற்கு, ‘‘வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?'' என்று புத்தகமே எழுதியிருக்கிறார்கள்.

அதுபோன்று இது வந்தவர்களுடைய கலை அல்ல. இது நமக்குச் சொந்தமானது என்பதற்கு அடையாளமாக, மேலைநாட்டவர்கள் ஆய்வு செய்து பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

பேராசிரியை மேரி ஸ்டீவர்ட்

பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவிற்குச் சென்றபொழுது, ஒரு புத்தகத்தை வாங்கினேன்; அதைப் பற்றி ‘உண்மை' இதழில் எழுதினேன்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், யோகா என்ற தலைப்பில், இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதை சொல்லிக் கொடுக்கக்கூடிய பேராசிரியை மேரி ஸ்டீவர்ட் என்பவர், ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அந்த நூலில் மிகத் தெளிவாக சொல்லுகிறார், இது 2500 ஆண்டுகளுக்கு முன்னால், திராவிட நாகரிகமாக, சிந்துவெளி நாகரிகத்தில் இருந்தது என்பதை எடுத்துச் சொல்கிறார்.

யோகா என்பது மூச்சுப் பயிற்சி. அந்த மூச்சுப் பயிற்சியை நாம் பயன்படுத்தவேண்டும். புத்தருடைய கலைகள்; அதேபோன்று சமணம் என்று அழைக்கப்படக் கூடியவைகளில் இவையெல்லாம் சிற்பங்களாக, ஓவி யங்களாகப் பதிவாகி இருக்கின்றன என்பது ஆய்வாளர் களின் கண்ணோட்டம்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் 

ஆங்கிலப் பேராசிரியர் ஆற்றிய சொற்பொழிவு

அதைவிட மிக முக்கியமாக ஓர் ஆங்கிலப் பேரா சிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து, ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு இவ்வளவு பெரிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது. 2019 இல் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. இதைப்பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களிடத்தில் கூட நான் சொன்னபொழுது, அவர் வியந்தார்.

இந்தப் புத்தகத்திலும் எழுதியிருக்கிறார்கள்; மொகஞ்சதாரோ, ஹரப்பா பற்றியெல்லாம். திராவிட நாகரி கத்தில், ஆரம்பத்தில் எப்படி பார்ப்பனியம், ஆரியம் ஊடுருவியது என்பதைப்பற்றியெல்லாம் இந்தப் புத்த கத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் உள்ள கருத்துகள் விரிவாக, விளக்கமாக ‘விடுதலை’, ‘உண்மை'யில் வெளிவரும்.

இந்தக் கலைகள் எப்படியென்று, நம்முடைய திருப்பூர் தோழர்கள் செய்ததற்கு நம்முடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்; இது பல இடங்களில் தொடர வேண்டும். காரணம் என்னவென்றால், இதை நம்மிட மிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டு, நமக்கே திருப்பி, ஏதோ இறக்குமதி போன்று இங்கே கொண்டு வருகிறார்கள்.

அடுத்து நண்பர்களே சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் - இங்கே 19 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு இருக்கின்றன.

அரியலூரிலே ஒரு பெரிய வரலாற்றை 

உருவாக்கி இருக்கிறார்கள்

இளைஞரணி என்று சொல்லுகிறபொழுது, கடுமை யாக நம்முடைய தோழர்கள் உழைத்து, இந்த அரிய லூரிலே ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கி இருக் கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

வரலாற்றில் ஒரு பகுதிதான் இப்பொழுது நடை பெற்றிருக்கிறது. அடுத்து நடைபெறவிருக்கின்ற சமூகக் காப்பு அணிவகுப்பு - அதேபோன்று பேரணி - மாலையில் நடைபெறக்கூடிய திறந்தவெளி மாநாடு - பொதுக்கூட்டம். 

அதில் நிறைய சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக் கின்றன. இங்கே சுருக்கமாக சொல்லவேண்டுமானால், இங்கே நிறைவேற்றப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்கள் மிக முக்கியமானவை.

மிகுந்த வேதனை, துன்பம்!

அதைவிட இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்லவேண்டும். மாநாட்டுக்குக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய தோழர்களில் ஒருவர், நம்முடைய சிந்தனைச்செல்வன் - அரியலூர் மாவட்டத்தினுடைய கழகச் செயலாளர்.

இன்று அதிகாலையில் அவர் மாநாட்டிற்குப் புறப்படுகின்ற நேரத்தில், அவருடைய அருமைத் தாயார் தனலட்சுமி அம்மையார் அவர்கள் மறைந் தார்கள் என்கிற செய்தியைக் கேட்டபொழுது, மிகுந்த வேதனையாகவும், துன்பமாகவும் இருந் தது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், அவருக்கு இரங்கல் சொல்வதற்காக நம்முடைய பொதுச்செயலாளர் சந்திரசேகரன் போன்றவர்கள் அங்கே சென்று, அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு, இங்கே வந்திருக்கிறார்கள்.

எனவே, என்னுடைய உரையை நான் தொடரு வதற்கு முன்பு, நாம் அனைவரும் எழுந்து, மறைந்த அம்மையாருக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஒரு நிமிடம் மவுனம் காப்போம். (அனைவரும் எழுந்து நின்று மவுனம் காத்தனர்).

நண்பர்களே, இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் என்பது மிகமிக முக்கியமான தீர்மானங்களாகும். மாலையில், இத்தீர்மானங்களைப்பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் ஓரளவிற்குத்தான் இருக்கும். ஆகவே, இங்கே சுருக்கமாக, விளக்கமாக சொல்கிறேன்.

ஏராளமான நம்முடைய திராவிடர் கழக இளை ஞர்களும் சரி, கழகத் தோழர்களும், பிரச்சாரம், போராட் டம் என்றுதான் நம்முடைய இயக்கம் அமைந்திருக்கிறது.

இந்தப் பிரச்சாத்தில், இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு விளக்கவேண்டும்.

இளைஞரணி மாநில மாநாட்டுத் 

தீர்மானங்களில் ஒரு தனித்தன்மை

தீர்மானங்கள் இத்தனை இருந்தாலும், 19 தீர்மானங்கள் இருக்கின்றன என்று சொன்னாலும், ஒரு சில தீர்மா னங்கள்தான் அரசுக்கு - மற்ற தீர்மானங்கள் - இந்த இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானங்களில் ஒரு தனித்தன்மையை பார்க்கவேண்டும்; அதை நான் பார்த்தேன். 

என்ன அந்தத் தனித்தன்மை என்று சொன்னால், நாம் கேட்டுக்கொள்வதைவிட, நம்முடைய இளைஞர் கள் செய்யவேண்டிய பணி, கலந்துகொள்ளவேண்டிய பணி, இயக்கத்தவர்கள் செய்யவேண்டிய பணிதான் பெரும்பகுதி இந்தத் தீர்மானங்களில் பல பகுதி.

பிரச்சார பணி, உடற்கொடை, கட்டுப்பாடு, நிறைய பயிற்சி வகுப்புகள் அத்தனையும் செய்யவேண்டும் என்ற அளவில், 

இன்றைய இளைஞர்களுக்கு இந்த இயக்கம்தான் எந்தக் கைமாறும் கருதாமல், மக்களுக்கு வழிகாட்டக் கூடிய இயக்கமாக தந்தை பெரியார் நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

நாம் ஒருபோதும் தோற்கமாட்டோம்! 

பெரியார் என்ற பேராயுதம், நம்முடைய கைகளில் இருக்கின்ற வரையில் நாம் ஒருபோதும் தோற்கமாட்டோம்! தோற்கமாட்டோம்!! தோற்க மாட்டோம்!!!

வெற்றியடைவதுதான் நம்முடைய வேலை. வெற்றி அடைந்துகொண்டுதான் இருக்கிறோம். 

அய்யா காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, நம்முடைய காலத்திலும் சரி, 

இதுவரையில், நாம் ஒவ்வொரு முறை - 

தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும்,

அதைத் தாங்கும், தாண்டும் சக்தி நம்முடைய கருஞ்சட்டைக் கூட்டத்திற்கு உண்டு; செயல்வீரர் களுக்கு உண்டு என்பதுதான் இந்த அரியலூர் மாநாட்டிலே, இந்த இளைஞர்களுடைய ஒப்பற்ற முயற்சியாகும்.

இன்று மாலையில் சமூகக் காப்பு அணிவகுப்பு நடைபெறும்.

கட்டுப்பாடு மிகுந்த ஓர் இயக்கம் -

இராணுவக் கட்டுப்பாடுள்ள தோழர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு நம்முடைய இயக்கம். எதிரிகளே வியப்படையக்கூடிய அளவிற்கு இருக்கும்.

நாம் பெரிய அளவில் எண்ணிக்கையில் இருக்கி றோமா என்று சொன்னால், தேவையில்லை.

எந்த ஒரு பெரிய புரட்சியாக இருந்தாலும் சரி - அல்லது எந்த ஒரு சமுதாய மாற்றமாக இருந்தாலும் சரி - அது எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல; மன உறுதி யையும், போராட்டத்தையும், கட்டுப்பாட்டையும்தான் பொறுத்தது நண்பர்களே, அதை நன்றாக நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

தீர்மானங்கள் வழிகாட்டுகின்ற 

நெறிமுறைகளாக அமைந்திருக்கின்றன

அப்படி செயல்படக் கூடிய அந்த வகையிலேதான், இந்தத் தீர்மானங்கள் வழிகாட்டுகின்ற நெறிமுறைகளாக அமைந்திருக்கின்றன.

ஆகவேதான், இதில் சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அழகாக ஒன்றைச் சொன்னார்.

ஓர் இயக்கத்தைப் பின்பற்றக் கூடியவர்கள், அவர்கள் அந்தக் கொள்கையை, இலக்கை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது.

எந்த இயக்கத்தில் இருந்தாலும், குறிப்பாக சமுதாய மாற்றத்திற்காக இருக்கின்றவர்களுக்கு இது மிகமிக முக்கியம்

No comments:

Post a Comment