ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.800 கோடி பி.ஜே.பி.,க்கு எங்கிருந்து வந்தது? அரவிந்த் கெஜ்ரிவால் வினா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.800 கோடி பி.ஜே.பி.,க்கு எங்கிருந்து வந்தது? அரவிந்த் கெஜ்ரிவால் வினா

புதுடில்லி, ஆக.26 டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பாஜக பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்  நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்ககள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காதவர்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக ரூ.800 கோடி ஒதுக்கியிருப்பதாக  டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்புப் புகார் கூறியுள்ளார். 

'ஆம் ஆத்மி கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து, டில்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. 

ரூ.800 கோடி யாருடைய பணம்? அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை நாடு அறிய வேண்டும். எங்களது எந்த சட்டமன்ற உறுப்பினரும் விலை போகவில்லை. அரசு உறுதித்தன்மையுடன் இருக்கிறது. டில்லியில் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என கெஜ்ரிவால் சுட்டுரைப் பதிவில் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment