40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

அரூர் சா.இராஜேந்திரன் 100 சந்தாக்களுக்கு ரூ.2 லட்சம் அளித்தார்
13.8.2022 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில்  தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன் 100 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கினார்.

சிதம்பரம் மாவட்டத்தில் 'தேனீக்களான' தோழர்கள் விடுதலை சந்தா சேர்ப்பு
சிதம்பரம் கழக மாவட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலை மையில், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், பொதுக்குழு உறுப் பினர் வ.பூ.அரங்கநாதன், கொழை கழகத் தலைவர் இரா.இராசசேகரன் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
முதலில் சேத்தியாத்தோப்பு கழகத் தலைவர் பா.இராச சேகரன்-அகிலபிரியா இணையர் இணைந்து சந்தா அளித்தனர். அடுத்து கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயலாளர் எ.என்.குணசேகரன் ஓராண்டு சந்தா அளித்தார். விழுப்பந்துறை மேனாள் திமுக செயலர் எஸ்.பாஸ்கரன், வலசக்காடு இராமசாமி, வலசக்காடு தங்க.நாகரத்தினம் ஆகியோர் சந்தா அளித்தனர்.
திருமுட்டம் ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட தொழிற் சங்க செயலாளருமான தங்க.ஆனந்தன் அனை வரையும் வரவேற்று, சால்வை அணிவித்து - அவரின் இணையரும் பேரூராட்சித் தலைவருமான செல்வி ஆனந்தனும் சேர்ந்து ஒரு ஆயுள் சந்தா ரூ.20,000 மற்றும் 10 சந்தா ரூ.20,000 அளிக்க ஒப்புக் கொண்டு - ரூபாய் பத்தாயிரம் அளித்தனர். அத்துடன், திருமுட்டத்தில், பிஜேபியின் ஆதிக்கத்தை ஒழிக்க தமிழர் தலைவர் ஆசிரியர் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் - அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
‘விடுதலை' சந்தா சேர்க்கும் தேனீக்கள் குழுவினருடன் காட்டுமன்னார்குடியில் கிழக்கு ஒன்றிய செயலர் ஆனந்த பாரதி, காட்டுமன்னார்குடி நகரத் தலைவர் பொன்.பஞ்ச நாதன் ஆகியோர் இணைந்து கொண்டனர். அறந்தாங்கியில் கிளைத் தலைவர் தங்க.பாண்டியன் ஓராண்டு சந்தா அளித்து சிறப்பித்தார். 
திருமுட்டம் தோழர் ராசு ஓராண்டு விடுதலை - உண்மை ஓராண்டு சந்தாவும் அளித்தார்.
காட்டுமன்னார்குடி நகர திமுக செயலாளரும், பேரூ ராட்சி மன்றத் தலைவருமான கணேசமூர்த்தி பத்து சந்தா (ஓராண்டு) அளிப்பதாக மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் தலைமையில் சென்ற குழுவினர்வெற்றிகரமாக விடுதலை சந்தாக்களை பெற்றுத் திரும்பினர்.

13.08.2022 அன்று மாலை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் விடுதலை நாளேட்டிற்கு 25 ஆண்டு சந்தா (ரூ.50,000) காசோலை வழங்கினார். 13.08.2022 அன்று 91 வயது பெரியார் பெருந்தொண்டர் தியாகராயர் நகர் சி.ஏழுமலை அவர்களை திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். அப்பொழுது விடுதலை நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா வழங்கினார். மாவட்ட பக செயலாளர் கதிர்.செந்தில்குமார் விடுதலை சந்தா பத்தாண்டுக்கான தொகை ரூ.20000/-, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட துணைத் தலைவர் க.சாமிநாதன் ஒன்பது ஆண்டு விடுதலை சந்தா மற்றும் அரையாண்டு விடுதலை சந்தாவுக்கு ரூ.19,000, மாவட்ட துணை செயலாளர் கு.சரவணன் மற்றும் காமலாபுரம் கிளை அமைப்பாளர் கே.பி.மாணிக்கம் ஆகியோர் இணைந்து அய்ந்து முழு ஆண்டு சந்தா, இரண்டு அரையாண்டு சந்தா தொகை ரூ.12000/- ஆகியோர் தருமபுரி மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் சி.காமராஜ், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை,  மா.முனியப்பன் கருநாடக மாநில மாணவர் கழக தலைவர் முன்னிலையில் வழங்கினார்கள்

தி.மு.க மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தருமபுரி ஆர்.சின்னசாமி விடுதலை நாளிதழுக்கு இரண்டு ஆண்டு ச,ந்தா ரூபாய் 4,000, தருமபுரி நகரக் கழக செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு செயற்பாட்டாளர், நாட்டான் மாது - நகர் மன்ற தலைவர் அம்மையார் லட்சுமி நாட்டான் மாது  இணையர், விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தாக்கள் ரூபாய் 20,000, தருமபுரி விவிஅய்டி (க்ஷி க்ஷி மி ஜி) கல்வி நிறுவனங்களின் தாளாளர்,பெரியாரின் பற்றாளர், அய்யா  வருவான் வடிவேலன், விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தாக்கள் ரூபாய் 20,000, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினர் உடன்: தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள். தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் (தி.மு.க) விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000அய் தஞ்சை மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட் ஆகியோரிடம் வழங்கினார் (11.8.2022).  அரூர் பேரூராட்சியின் தலைவர் அய்யா,  சூர்யா தனபால், அம்மையார் இந்திராணி தனபால் இணையர் விடுதலை பத்து ஆண்டு சந்தா ரூபாய் 20,000அய் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட கழகத் தோழர்கள்.

மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் மேனாள் ஒன்றிய திமுக செயலாளர் ராசு தமிழ்ச்செல்வன், ஆசிரியர் கலையரசன்- சங்கீதா இணையர், திமுக பிரமுகர் மெடிக்கல் சத்தியமூர்த்தி ஆகியோர் தலா ஓராண்டு சந்தாவை வழங்கினர். உடன்: பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சிலம்பரசன். காரைக்குடி நகர மேனாள் இளைஞரணி தலைவர் நா.பாபு ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000த்தை பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணியிடம் வழங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் மு.அர்ச்சுனன் ஓராண்டு விடுதலை சந்தா மற்றும் கருநாடக மாநில மாணவர் கழக தலைவர் மா.முனியப்பன் அரையாண்டு சந்தாவினை இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.செல்லதுரையிடம்  வழங்கினர். உடன்: மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம்.

மேச்சேரி ஒன்றிய திமுக அவைத் தலைவர் வி. சி. இராசேந்திரன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். அரூர் தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பூசைக்காரனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது - அவர் விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000அய் பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரனிடம் வழங்கினார். உடன் மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள். பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை 60 ஆயிரம் சந்தா சேர்ப்பு நிகழ்வு அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. உடன்: பொன்னேரி நகர தலைவர் வே.அருள், பொன்னேரி இளைஞரணி க. சுகன்ராஜ் மற்றும் பொன்னேரி நகர செயலாளர் மு. சுதாகர். சந்தா (ஓராண்டு) வழங்கியவர்கள் விவரம். ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர் கண்ணதாசன். தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வே.அன்புவாணன், வழக்குரைஞர் லெனின், ஜானகிராமன் தி.மு.க.



No comments:

Post a Comment