ஞாயிற்றுக்கிழமை 34-ஆவது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

ஞாயிற்றுக்கிழமை 34-ஆவது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை, ஆக.19 சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற் றுக்கிழமை (21.8.2022) 34-ஆவது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள் ளது. பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,46,797 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 48,13,470 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

மேலும் 15 முதல் 17 வயதுகுட் பட்டவர்களில் 2,26,495 நபர் களுக்கு முதல் தவணை தடுப் பூசியும்,  1,79,909 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுகுட்பட்டவர்களில் 1,29,051 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86,812 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை தவணை தடுப்பூசி 5,08,124 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 21.08.2022 அன்று 34ஆ-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக்குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி காவல்துறை , ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக இரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

செப்டம்பர் மாதம் 30ஆ-ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லமல் தடுப்பூசி செலுத்த தமிழ் நாடு அரசால் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மய்யங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கோவிட் தொற்றி லிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளலாம்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதி யுடையவர்கள். இவர்களுக்கு கார் பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச் சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

 எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனை வரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. எனவே முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண் டிய நபர்கள் மற்றும் முன்னெச் சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் 21.08.2022  ஞாயிறு அன்று நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment