ஒன்றிய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25ஆயிரம் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

ஒன்றிய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25ஆயிரம் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, ஆக.28 நடப்பாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாண வர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண் ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.  www.scholarships.gov.in    என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப் பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு  தமிழ்நாடு அரசு சார்பில் பல நல திறன்கள் அளிக்கப்பட்டு வருகிறது வீட்டில் முதல் பட்டதாரிக்கு கல்வி உத வித்தொகைகள் அளிக்கப்படு கிறது. மேலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மட்டுமின்றி  பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் போன் றவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வரு கிறது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெற்று பள்ளி படிப்போடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து மேற் படிப்பை தொடர்கின்றனர்.

மாநில அரசுபோல ஒன்றிய அரசும் உயர்கல்வி படிக்கும் மாணாக் கர்களுக்கு பல்வேறு  உதவித்தொகை களை வழங்கி வருகிறது.  ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தால், திறன் அடிப்படையில்  ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை  வழங்கப் படுகிறது. இதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்து தேர்வாகும் மாணவர்களுக்கு கல்வி  உதவித் தொகையை ஒன்றிய அரசே நேரடியாக வழங்குகிறது.உதவித் தொகை பெற விரும்புவோர்  https://scholarships.gov.in/என்ற இணைய தளத்தில் விண்ணப் பிக்க வேண்டும். 12ஆம் வகுப்பு முடித்த வர்கள் நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் வரை உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்த வர்கள் கல்வி உதவி தொகை விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் ஆகிய நடைமுறை இணையதளத்திலேயே மேற் கொள்ளலாம்.


No comments:

Post a Comment