‘விடுதலைப்போரில் வீரத் தமிழகம்’ கலைவாணர் அரங்கில் ஒலி - ஒளிக்காட்சி செப்.1 வரை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

‘விடுதலைப்போரில் வீரத் தமிழகம்’ கலைவாணர் அரங்கில் ஒலி - ஒளிக்காட்சி செப்.1 வரை நீட்டிப்பு

சென்னை,ஆக.26- சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ ஒலி - ஒளிக்காட்சி, செப்.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேசத் தலைவர் களை போற்றி சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ’விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி - ஒலிக்காட்சி ஆக.15-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டது. 25ஆம் தேதி (நேற்று) வரை இக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்அதிகளவில் பார்வையிட ஏதுவாக செப்.1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டு களாகத் தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி - ஒலி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் கண்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி காலை 9 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் இந்த முப்பரிமாண ஒளி - ஒலிக் காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment