சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் 16 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் 16 பேர் கைது

பெங்களூரு,ஆக.21 கருநாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கருநாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு, மாநில மேனாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, குடகு பகுதியில் சித்தராமையாவின் கார் மீது முட்டைகள் வீசப்பட்டது. மேலும், தொலைப்பேசி மூலம் அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். 

கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக குடகில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஷால் நகரில் 9 பேர் மற்றும் மடிகேரியில் 7 பேர் என கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார்கள் என்று குடகு கண் காணிப்பாளர் அய்யப்பா தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment