செப்.15 முதல் அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

செப்.15 முதல் அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்

சென்னை,ஆக.26-தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செப்.15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக் குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி சமையலுக்கு சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுதல், காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அம்சங்களை பார்வையிட்டு அதன் தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதைக் கண்காணிக்க வேண்டும். உணவு பரிமாறுவதற்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவி செய்யலாம். சுகாதாரமான குடிநீர் வழங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப் பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுதொடர்பான அறிவு றுத்தல்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் குழுவினருக்கு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதி காரிகளும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த காலை சிற்றுண்டி திட்ட மானது, தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடை வார்கள். அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment