தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி, ஆக.19 அரசுப் பள்ளிகளில் விரைவில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.  பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருச்சி, புதுக் கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கல்வி அதி காரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடை பெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச் சர் ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.  சிவசங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரவேற்றார்.  

கூட்ட முடிவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்ட நிதி ரூ.1,300 கோடி வந்த உடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மேற் கொள்ளப்படும். இதில், மரத் தடியில் வகுப்புகள் நடக்கும் 2,500 பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், பள்ளி களில் கட்டமைப்பை மேம்படுத்த நபார்டு வங்கியில் இருந்து ரூ.1,650 கோடி நிதி பெற உள்ளோம். கல்வி தொலைக்காட்சி 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள் ளிகளில் படித்து முடித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான ஒரு தளமாக விளங்கும் கல்வி தொலைக் காட்சிக்காக கூடுதலாக இன் னொரு சேனலும் தொடங்கப்பட உள்ளது. இதனால், அதனை நிர்வகிக்க ஒரு நபர் தேவை. இதற் காக 79 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் தகுதியின் அடிப் படையில் ஒருவரை, இதற்கென நியமிக்கப்பட்ட தனிக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அவரை பற்றி கடந்த 2 நாட்களாக பல்வேறு தகவல்கள், பின்புலம் குறித்து தெரிய வந்ததால், உடனடியாக அவரது நியமன ஆணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டேன். அவரது பின்புலத்தை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

 10 ஆயிரம் ஆசிரியர்கள் 

அரசு பள்ளிகளில் தமிழ் வழி, ஆங்கில வழி என எந்த மீடியத்தை தேடி வருகிறார்களோ அதை கொடுக்கும் வகையில் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம். இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரிய அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது. 2,500 முதுகலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. மேலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங் கப்பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment