புதுக்கோட்டையில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

புதுக்கோட்டையில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி

புதுக்கோட்டை ஆக 28- புதுக் கோட்டையில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டிகள் ஒன்பது இடங்களில், பதினோரு மய்யங்களில் நடத்தப் பட்டன. தஞ்சை வல்லத் தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பெரியார் உய ராய்வு மய்யம் இணைந்து பள்ளி மாணவ மாண வியருக்காக நடத்திய இந் தப் போட்டிகள் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடத்தப் பட்டு வருகின்றன.

புதுக்கோட்டையில் முதற்கட்டமாக கடந்த 24.8.2022-அன்று நடந்த போட்டிகள் புதுக் கோட்டை இராணியார் உயர்நிலைப் பள்ளி, சிவ புரம் கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.சி.நடுநிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணவிடுதி அர சினர் உயர்நிலைப் பள்ளி, காவேரிநகர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, அண்டக்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, வல் லத்திராக்கோட்டை இராமசாமி தெய் வாணை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடத்தப் பட்டன.

இப்போட்டிகளை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.அறி வொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்;ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, நகர இளை ஞரணிச் செயலாளர் பூ.சி.இளங்கோ, நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு. தருமராசு, ம.மு.கண்ணன், அறந்தாங்கி மாவட்ட ப.க.செயலாளர் தி.குண சேகரன், புதுகை மாவட்ட ப.க.தலைவர் செ.அ.தர்ம சேகர், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பார்வையாளர் களாக வந்திருந்தர்களும் இணைந்து இந்தப் போட் டிகளை நடத்தினார்கள்.

இந்தப் போட்டிகளில் 735 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். முதற்கட் டமாக எழுதியிருந்தாலும் இரண்டாம் கட்டமாக 26.8.2022 பொன்னம ராவதியில் உள்ள அமல அன்னை மெட்ரிக் பள் ளியிலும் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள் ளியிலும் மாணவ-மாண வியர் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை மாவட் டத்தில் மூன்றாம் கட்ட மாகவும் 30-ஆம் தேதி தொடர்ந்து சில பள்ளி களில் இந்த வினாடி-வினாப் போட்டி நடக்கயிருக்கிறது.

No comments:

Post a Comment