பட்டமளிப்பு விழா அரசின் கொள்கை எதிர்ப்பு விழா அல்ல ஆளுநருக்கு கண்டனம் : பிரின்ஸ் கஜேந்திர பாபு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

பட்டமளிப்பு விழா அரசின் கொள்கை எதிர்ப்பு விழா அல்ல ஆளுநருக்கு கண்டனம் : பிரின்ஸ் கஜேந்திர பாபு

சென்னை, ஜூலை 15- பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய சட்டங்கள், விதிகளின்படி சுதந்திரமாக தங்கள் பணிகளை மேற் கொள்ளத் தகுந்த வழிகாட்டுதலை, தமிழ் நாடு அரசு உயர்கல்வித் துறை வழங்க வேண்டும் என்று  பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர்  பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களை மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யும் மேடைகளாகத் தமிழ்நாடு ஆளுநர் மாற்றி வருகிறார். விவாதத்திற்கு உரிய ஒரு கருத்தை ஒருவர் முன்வைத்தால்  அதை மறுத்துப் பேச மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். பட்டமளிப்பு விழாவை அத்தகைய விவாதத்திற்கு உரிய அரங்கமாக மாற்றக்கூடாது.

பல்வேறு சிக்கல்களைக் கடந்து மாணவர்களின் உழைப்பிற்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் பட்டமளிப்பு விழா. அத்தகைய பட்டமளிப்பு விழா உரைகள், உற்சாகத்துடன் சமூகத்தை மேம்படுத்த தங்கள் அறிவைப் பயன்படுத்த மாண வர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.  பொறுப்பு மிக்க உரைகள் அமைய வேண் டிய பட்டமளிப்பு விழாக்களைத் தமிழ் நாடு ஆளுநர் அவர்கள் தனது சர்ச்சைக் குரிய உரைகள் மூலம் களங்கப்படுத்தக் கூடாது. மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத் துக்களைப் பேசி, மாநில அரசுக்கு எதி ரான மனநிலையை  மாணவர்களிடம் உருவாக்க முயல்வது நியாயமற்ற, நேர் மையற்ற அணுகுமுறை. 

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் ஆளுநர் மாளிகை சொல்வதைத் தான் செய்யமுடியும் என்று  தெரிவித்த தாக உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. பல் கலைக்கழகம் தனது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் உரிமைகூட இல்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்பட் டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. 

ஆளுநர் மாளிகை பல்கலைக் கழகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது ஏற்புடையது அன்று. மதுரை காமராசர் பல்கலைக்கழக இணை வேந்தர் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்த பின்னர், இணை வேந்தரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கம் அளித்து, விழாவில்  அவரைப் பங்கேற்க முயற்சி மேற்கொள் ளாமல், இணைவேந்தர் இல்லாமல் விழாவைத் தொடர்ந்து நடத்தியது தமிழ் நாடு அரசையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்  பிரதிநிதிகளையும் அவமதிக்கும் செயல். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் மூலம்  உருவானது. தமிழ்நாடு மக்களின் வரிப் பணத்தில் நிர்வகிக்கப்படுகிறது. அத்த கைய பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை மதிக்காமல், ஆளுநர் மாளி கையின் உத்தரவின்பேரில் இயங்குகிறது என்றால் இத்தகைய போக்கு மக்க ளாட்சிக்கு விடப்பட்ட சவால். இதை எளிதாகக் கடந்து செல்ல இயலாது. பல் கலைக்கழகங்களின் நிர்வாகச் செயல் பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு  ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  மக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் பல்கலைக் கழகங்களின் ஜனநாயகத்தைக்  காக்க  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும்.  இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.


No comments:

Post a Comment