புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின்மீது தேசியச் சின்னத்தை பிரதமர் திறந்து வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கும் செயல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின்மீது தேசியச் சின்னத்தை பிரதமர் திறந்து வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கும் செயல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதுடில்லி, ஜூலை 14 - புதிய நாடா ளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை மீது 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தேசிய சின்னத்தை அமைத்து பிரதமர் திறந்து வைத்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கும் செயல் ஆகும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி யின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதிய நாடாளுமன்ற கட்டடத் தின் மீது தேசிய சின்னத்தை பிரதமர் திறந்து வைத்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மிகத் தெளிவாக மீறியிருக்கும் செயலே ஆகும். நமது அரசமைப்புச் சட்டமானது, நமது ஜன நாயகத்தின் 3 தூண்களான - நிர்வாகம் (அரசாங்கம்), நாடாளு மன்ற அமைப்பு (நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்கள்) மற்றும் நீதித் துறை ஆகியவற்றை மிகத் தெளி வான முறையில் தனித் தனியாக பிரித்து வைத்திருக்கிறது. குடி யரசுத் தலைவர் நாடாளுமன் றத்தை நடத்த அழைப்பு விடுப் பார். அரசு நிர்வாகத்தின் தலைவ ராக பிரதமர் இருப்பார். நாடாளுமன்ற அமைப்பானது சுயேட்சையான பல பங்களிப்பு களை ஆற்றக் கூடியதாக இருக் கும்; அவற்றில், சட்டங்களை இயற்றுவது, அரசு நிர்வாகத்தை நாட்டு மக்களுக்கு பணியாற்ற கடமைப்பட்டதாகவும் பதில் சொல்ல கடமைப்பட்டதாகவும் வைத்திருப்பது உள்ளிட்ட செயல் பாடுகளை நாடாளுமன்ற அமைப்பு மேற்கொள்ளும். இந்த மூன்று தூண்களுக்கு இடையிலான அரசமைப்புச் சட்ட ரீதியிலான அதிகாரப் பிரி வினை என்பது தற்போது அரசு நிர்வாகத் தின் தலைவரால் மீறப் பட்டுள்ளது; குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மேற்கண்ட நிகழ்வின்போது பிரதமர் பூஜை நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறார். இந்திய அரச மைப்புச் சட்டமானது, அனைத்து இந்தியர்களுக்கும், அவரவர் நம்பிக்கை அடிப்படையி லான மத நடவடிக்கைகளை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையும் பாதுகாப்பும் அளித் திருக்கிறது. இது எந்த விதத்திலும் பிரிக்க முடியாத உரிமை ஆகும். 

அதே வேளையில் இந்திய அரசமைப்புச் சட்டமானது, அரசு நிர்வாகம் எந்த விதத்திலும் எந்த வொரு நம்பிக்கையையோ, மதத் தையோ பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ கூடாது என்பதை மிகத் தெளிவான முறையில் வரையறை செய்திருக் கிறது. 

எனவே பிரதமரும் ஒன்றிய அரசாங்கமும், அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது உறுதியேற்றுக் கொண்ட அடிப்படையில் இந்திய அரச மைப்புச் சட்டத்தின் விழுமி யங்களை பாதுகாக்கவும் உறுதி செய்யவும் எவ்வித சமரசமும் இல்லாமல் அமலாக்கவும் வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு வலியுறுத்துகிறது. -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment