வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பாஜக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பாஜக!

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

சிறீநகர், ஜூலை 6- தங்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக நாட்டில் வெறுப்புப் பிரச் சாரத்தை மேற்கொள்ளவும், மத வன்முறைகளை நடத்தவும் தன்னிடமுள்ள குற்றவாளிகளைப் பா.ஜ.க. பயன்படுத்துவதாக மெக பூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். 

ஜம்மு - காஷ்மீரின் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெக பூபா முப்தி இதுதொடர்பாக மேலும்  கூறியிருப்ப தாவது: 

சமூகத்தில் குழப்பத்தை பரப்பவும், இந்து - முஸ்லிம் பதற் றத்தை உருவாக்கவும் பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காக, பா.ஜ.க. குற்றவாளிகளுக்கு ஆதரவையும், நிதியையும் அளித்து அவர்களைத் தங்களின் நலனுக்காகவும், பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துகிறது.  கன்னையா லால் (ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்) கொல்லப்பட்ட போது, இந்துக் களும்- முஸ்லிம்களும் ஒருவரையொருவர் எதிர்த்துச் சண்டையிட்டனர்.

இதனால் யாருக்கு லாபம்?  முதலில் உதய்பூர் கொலைகாரன் மற்றும் இப்போது ரஜோரியில் பிடிபட்ட ‘லஷ்கர்-இ-தொய்பா’ பயங்கரவாதி இரு வரும் பாஜகவுடன் தீவிர தொடர்புகளைக் கொண் டுள்ளனர். பசுக் காவலர்களாக இருந்தாலும் சரி, பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, தங்கள் வகுப்புவாத பிளவு மற் றும் வெறுப்பு நோக்கத்தை நிலை நிறுத்த ஆளும் கட்சி (பா.ஜ.க.)  கிரிமினல்களைப் பயன்படுத்துகிறது.  இந்த குற்றவாளிகளில் யாராவது எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடையவர்களாக இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று  கற்பனை செய்து பாருங்கள். எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்த முடிவற்ற ‘பிரைம் டைம்’ இடத்தை ஊடகங்கள் ஒதுக்கியிருக்கும். ஆனால், இப்போது பல  முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டும், உண்மைகளை மழுங்கடிக்கும் வேலைகளை ஊடகங்கள்  செய்து வருகின்றன.  

இதேபோல புல்வாமா தாக்குதல் வழக்கில் டேவிந்தர் சிங் எப்படி விடுவிக்கப்பட்டார். தாக்குதல் எப்படி நடந்தது? இதனால் பயனடைந்தது யார்? என்பது குறித்து கேள்விகளும் எழுகின்றன. 

இவ்வாறு மெகபூபா முப்தி பேசியுள்ளார்.

No comments:

Post a Comment