நீர்வளத் துறை : தமிழ்நாடு தன்னிறைவு மாநிலமாகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

நீர்வளத் துறை : தமிழ்நாடு தன்னிறைவு மாநிலமாகும்

திருச்சி, ஜூலை 25 தமிழ்நாட்டில் நீர்வளத் துறை திட்டமிட்டு செயல்பட்டால், தமிழ்நாடு தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அ.வீரப்பன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர் சங்கத்தின் சென்னை மற்றும் திருச்சி கிளை சார்பில் தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 

பின்னர், அ.வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: 

தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை நீர்வளம் தொடர்பான தகவல்களை இணையதளங்களில் வெளிப்படையாக தெரிவிக்க வேண் டும். தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று கூறுவது தவறானது. தமிழ்நாட்டில் உள்ள 88 நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள், 39 ஆயிரம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் உள்ள வண்டல் மண்ணை 2 மீட்டர் அளவுக்கு எடுத்து ஆழப்படுத்தினால், இன்னும் 300 டிஎம்சி தண்ணீரை நாம் சேமிக்க முடியும். இதன் மூலம் நீர்த் தேக்கங்களின் கொள்ளளவை 1,500 டிஎம்சியாக உயர்த்தலாம்.

தமிழ்நாட்டில் 925 மில்லி மீட்டர் மழை மூலம் 2,500 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இவற்றை சேமித்து வைக்கக்கூடிய கட்டமைப் புகள் இல்லை. இதை செயல்படுத்த வேண்டிய செயல்திட்டங்களை நாங் கள் அரசுக்கு கொடுத்துள்ளோம்.

காவிரியில் அதிக தண்ணீர் வரும்போது, கொள்ளிடம் வழியாக கடலுக்குச் செல்கிறது. இதை பயனுள்ள முறையில் பயன்படுத்த ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளது போன்று நீரேற்று திட்டங்கள் மூலம் வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம்.

இதுபோன்று நாங்கள் தெரிவிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நீர்வளத் துறை திட்டமிட்டு செயல் பட்டால் 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.

 தமிழ்நாட்டில் எந்த ஆறுகளிலும் மணல் அள்ளக் கூடாது. அதற்கு பதிலாக செயற்கை மணல் அல்லது இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலையில் மணலை இறக்குமதி செய்து வழங்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment