ஜெயின்கோவிலில் கொள்ளை: அர்ச்சகர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

ஜெயின்கோவிலில் கொள்ளை: அர்ச்சகர் கைது

சென்னை, ஜூலை 18 கீழ்ப்பாக்கம் ரங்க நாதர் நிழற்சாலையில் ஸ்வதாம்பர் முர்டிபுஜக்ட் ஜெயின் சன்க் என்ற ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவி லில் துணைத் தலைவராக இருந்து வரும் கிம் ராஜ் சாக்கரியா (56) பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்துள் ளார்.

பூஜை செய்வதற்காக தங்கத் தட்டு, தங்க கிண்ணம் பெரியது மற்றும் சிறியது தங்க ஊதுபத்தி ஸ்டாண்ட், தங்க விசிறி தங்க கண்ணாடி பிரேம், தங்கக் கலசம் என பல லட்சம் மதிப்பிலான தங்க பூஜை பொருள்கள் மற்றும் 350 கிராம் வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.

பூஜை முடித்து கருவறையை மூன்று முறை சுற்றி வந்து விட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த தங்க பொருள்கள் மற்றும் வெள்ளிப் பொருள் கள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் காணாமல் போன பல லட்சம் மதிப்பிலான பொருள்களை கண்டு பிடித்து தருமாறு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்த போது பூப்போட்ட நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் கையில் பச்சை நிற பையை உள்ளே எடுத்து வருவதும், சிறிது நேரத்தில் அவசர அவசரமாக அவர் பதறி அடித்து ஓடுவதும் தெரியவந்தது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாள்களாக விடுமுறை வேண்டும் என அங்கு அர்ச்சகராகப் பணியாற்றிய குஜராத் தைச் சேர்ந்த விஜய் மோத்திலால் ராவல் (37) என்பவர் கேட்டதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூர் செல்லவிருப்பதாக கூறி தலைமறைவானதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அர்ச்சகரைப் பிடித்து கைது செய்தனர். கொள்ளை யடித்த பொருள்களை அவரிடமிருந்து மீட்டனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அவரது அலைபேசியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடந்த 10 நாள்களில் யாருக் கெல்லாம் தொலைப்பேசியில் பேசினார் என்பதைக் கண்டறிந்தனர். அப் பொழுது கருநாடகா மாநிலம் ஹூப் ளியில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர் மகேந்திரன் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது விசாரணை யில் தெரியவந்தது. அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment