செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அதிகாரப் போதை!

* தமிழ்நாடு பிரச்சினையைப் பேச உரிமை உண்டு.

- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

>> பேசாமல் தமிழக பி.ஜே.பி. தலைவராக திரும்பி வந்துவிடலாமே!

முதலில்லா வியாபாரம்

* திருப்பதி உண்டியல் காணிக்கை ஜூலையில் ரூ.100 கோடி. 

>> கல் முதலாளி கார்ப்பரேட் முதலாளி ஆகிவிட்டாரோ!

மனக்குமுறலோ!

* சமூகநீதிபற்றி சிந்தித்து செயல்படவேண்டும்.

- பிரியா விடை நிகழ்ச்சியில் 

குடியரசுத் தலைவர் கருத்து

>> போகிறபோது - மோடி அரசுக்கு நல்ல குட்டுதான் வைத்திருக்கிறார்!

புகழாமல் என்ன செய்வார்?

* திலகருக்குப் பிறந்த நாள் - பிரதமர் மோடி புகழாரம்.

>> செக்கு ஆட்டுபவனும், பெட்டிக் கடைக்காரனும் சட்டசபைகளுக்குச் செல்லவேண்டுமா என்று கேட்ட 'புண்ணியவான்' திலகராயிற்றே!

எந்தக் கலாச்சாரம்!

* பாரத கலாச்சாரத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

- ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் 

ராம்நாத் கோவிந்த்

>> நாட்டின் முதல் குடிமகனாக இருந்தும் இரண்டு கோவில்களில் அவர் அவமதிக்கப்பட்டாரே -  அந்தக் கலாச்சாரத்தையா?

விடிவது எப்போ?

* இரவிலும் தேசியக் கொடியை பறக்கவிடலாம்.

- ஒன்றிய அரசு அறிவிப்பு

>> இரவில் வந்த சுதந்திரம் - விடிவது எப்போது?

- புரட்சிக்கவிஞர்


No comments:

Post a Comment