''கழுதைகளின் கதறல்கள்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

''கழுதைகளின் கதறல்கள்!''

‘துக்ளக்', 20.7.2022,

மாநில சுயாட்சி, கச்சத்தீவு, ‘நீட்' ஒழிப்பு என்பதெல்லாம் - பார்ப்பனர்கள் பார்வையில் பா.ஜ.க. பார்வையில் குப்பைகளாம்.  கழுதைகள் அவற்றைத் தின்னுகின்றனவாம்; மலம் துடைத்துத் தூக்கி எறியப்பட்ட மதவாதப் பழம் குப்பைகளைத் தின்னும் கழுதைகள்தான் இப்படி கதறுகின்றன!

கேள்வி: வரும் தேர்தல்களில் மலைவாழ் மக் களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாயம் கருதியே திரவுபதை முர்முவை பா.ஜ.க., குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியதாக ‘முரசொலி' தாக்கியுள்ளதே?

பதில்: மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த திரவு பதை முர்முவை எதிர்க்கட்சிகள் நிறுத்தி யிருந் தால், அது  சமூகநீதி - அதை பா.ஜ.க. செய்தால் ‘அரசியல் ஆதாயம்' இதுதான் ‘திராவிட மாடல்' சமூகநீதி.

‘துக்ளக்', 20.7.2022

நமது பதிலடி: சமூகநீதிக்கு எதிராக ஒவ்வொன் றிலும் காயை நகர்த்தும் பா.ஜ.க. - குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டும் மலைவாழ் சமூகத் தைச் சேர்ந்த பெண்ணை நிறுத்துவதால்தான் ‘முரசொலி' கேள்வி எழுப்புகிறது.

‘தலித்' சமூகத்தைச் சேர்ந்த மாண்புமிகு ராம்நாத் கோவிந்தைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந் தெடுத்தும், அவர் பூரி கோவிலிலும், ராஜஸ்தான் கோவிலிலும் அவமானப்படுத்தப் பட்டபோது கண்டுகொள்ளாத பா.ஜ.க. - சமூகநீதி பேசும் போதுதான், வாங்கிக் கட்டிக் கொள்கிறது.

No comments:

Post a Comment