மோடி அரசின் திறமையின்மையையே விலைவாசி உயர்வு, வேலையின்மை காட்டுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

மோடி அரசின் திறமையின்மையையே விலைவாசி உயர்வு, வேலையின்மை காட்டுகிறது!

தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவ் சாடல்

அய்தராபாத், ஜூலை 14 - “மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம் உயர்வு, ரூபாய்  மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் - டீசல்  மற்றும் இதர விலைவாசி உயர்வு,  வேலையில்லா திண்டாட்டம் 8.3 சத விகிதம் வரை அதிகரிப்பு ஆகியவை பாஜக அரசின் திறமையின்மையை யே அம்பலப்படுத்துகின்றன” என்று தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திர சேகர ராவ் குற்றம் சாட் டியுள்ளார். தெலங்கானா மாநி லத் தலைநகர் அய்தராபாத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியிருப்ப தாவது: 1970-ஆம் ஆண்டுகளில் எமர் ஜென்சியை பிரகடனப்படுத் தும் அளவுக்கு தைரியமாக இருந் தவர் மேனாள் பிரதமர் இந்திரா காந்தி. அதேசமயம் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது. ஒரு  பாஜக செய்தித் தொடர்பாளர் (நூபுர்  சர்மா) முட்டாள்தனமாக பேசினார்.  மற்ற நாடுகளில் நம் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் மன்னிப்பு கேட்டார்கள். பாஜக தவறு செய்திருந்தால் நாடு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.  நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி பார்திவாலா (நூபுர் சர்மாவை கடுமையாக சாடிய வர்கள்) ஆகி யோருக்கு நான் வணக்கம் செலுத்து கிறேன். இந்த (இந்துத்துவா) தீமைகளிலிருந்து இந்தியாவை காப்பாற்ற (நூபுர் சர்மாவை சாடிய)  அதே மனப் பான்மையை கடைப் பிடிக்க வேண்டும்.

இந்த துரோகிகள், பேய்கள், சர்வாதிகாரிகள் (பாஜக தலை வர்கள்) ஆகியோரிடமிருந்து நீதித்துறை நாட்டை காப்பாற்ற வேண்டும். நரேந்திர மோடி அரசு போக வேண்டும். பாஜக அல்லாத அரசு வர வேண்டும். இது எங்களின் முழக்கம்.  நரேந்திர மோடிக்கு ஒரு வகை யில் நன்றி சொல்கிறேன் இரட்டை இன்ஜின் அரசாங்கம் என்ற இரட்டை என்ஜின் வளர்ச் சிக்கான அவரின் திட்டத்தை ஏற்கிறேன். ஆனால்,  எந்த இரட்டை என்ஜின் வர வேண்டும், அது பாஜக இரட்டை என்ஜினாக வேண்டுமா அல்லது பாஜக அல் லாத இரட்டை என்ஜினாக வேண் டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.  நாட்டுக்கு பாஜக அல்லாத இரட்டை இன் ஜின் அல்லாத இன்ஜின் ஆட்சி தேவை என்பதை உண்மைகளும், புள்ளிவிவரங் களும் தெளிவாக கூறுகின்றன.

ஒன்றிய அரசின் புதிய ராணுவத் திட்டமான ‘அக்னிபாத்’ போன்ற திட்டங்களை இறுதி செய்வதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மற்ற கட்சிகளுடன் ஆலோ சனை நடத்தி அவர்களை நம் பிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.  இராணுவத்தில் இளைய தலை முறை தேவை என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நமது நாட்டுக்கு கூட இளம் பிரதமர்தான் தேவை. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் மற்றும் இதர விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் 8.3 சதவிகிதம் வரை அதிகரிப்பு ஆகி யவை பாஜக அரசின் திறமையின் மையையே அம்பலப்படுத்துகின் றன.  இவ்வாறு கே. சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment