''விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?'' முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு முழுத் தகுதிபெற்ற நூல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

''விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?'' முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு முழுத் தகுதிபெற்ற நூல்!

இணைய வழி கருத்தரங்கில் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி

திராவிடர்கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆய்வுரை

தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், கடந்த 8.7.2022 வெள் ளிக்கிழமை மாலை நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் 'விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?' நூல் குறித்து ஆய்வுரை வழங்கப்பட்டது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலை வர் முனைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பகுத்தறி வாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச் செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தமிழ் பிரபாகரன், பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, பகுத் தறிவு கலைப்பிரிவு செயலாளர் மாரி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித் தனர். எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் முருகானந்தம்  அனைவரையும் வரவேற்றார்.

திராவிடர் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி தளபதிராஜ் எழுதிய 'விமர்சனங்களுக்கு அப்பாற் பட்டவரா பெரியார்?' நூல் குறித்து திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆய்வுரை வழங்கினார்.

அவர் தனது உரையில்,

நமது தோழர் தளபதிராஜ் அவர்கள் "விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?" என்கிற அவரது நூலில் ஆற்றியிருக்கிற பணி மிகப் பெரிய ஆய்வுப் பணி.

'முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எழுதப்பட்ட நூல்' என்று சொல்வதற்கு முழுத் தகுதியான ஒரு நூல்.

முனைவர் பட்ட ஆராய்ச்சித் தலைப் புகளை எடுப்பவர்கள், "பெரியாரைப் பற்றிய முரண்களும் அதன் உண்மை நிலையும்" என்ற ஒரு தலைப்பை எடுத் தால், அந்த ஆராய்ச்சி ஒரு புத்தக வடிவம் பெற்றால் அது இப்படித்தான் இருக்கும்.

மிகப்பெரும் பேராசிரியர்களாக இருக் கக் கூடியவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கென 'ஆராய்ச்சி நெறிமுறை கள்' என்று சில வரையறைகளை வகுத் திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு துளியும் வழுவாமல் அந்த ஆராய்ச்சி வழிமுறைகளில் நின்று இதை அவர் ஆற்றியிருக்கிறார்.

இது ஒரு பெரிய பணி!

'லெபோரியஸ் ஒர்க்' என்று ஆங்கி லத்தில் சொல்வார்கள். அவ்வளவு பெரிய வேலை இருக்கிறது. ஒரு கட்டுரையை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல.

நிறைய கருத்துகளை தொகுத்து விட் டால் அதை எங்கிருந்து தொடங்குவது என கொஞ்சம் தயக்கமாக இருக்கும். அதற்கும் ஒரு மனநிலை வேண்டும். அந்த மனநிலையோடு, ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் நூல் பிடித்தார் போல அது தொடர்பான தேவையான செய்திகளை முழுமையாக தொகுத்து அதன்பிறகு அதை எடிட் பண்ணி ஒரு கட்டுரையை கொடுக்க வேண்டும்.

தோழர் தளபதிராஜ் முதலில் ஒரு ஒளிப்பதிவாளர். அதனால் அவருக்கு எடிட்டிங் நன்றாகத் தெரியும். அந்த ஒரு பார்வையோடு, சினிமாஸ்கோப் மாதிரி பெரிதுபடுத்தி செய்திகளை எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு, அதை எவ்வளவு அழகாக எடிட் பண்ண வேண்டுமோ அந்த அளவிற்கு தொகுத்து ஒவ்வொரு கட்டுரையையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கட்டு ரையும் ஒரு சின்ன புத்தகமாக போடலாம் என்கிறஅளவிற்கு அவர் செய்திருக்கிறார்.

தேடித்தேடி படிக்க வேண்டியதை எல்லாம் தொகுத்து இப்படி நம் கையில் கொடுத்து விட்டால் நமக்கு எவ்வளவு பெரிய வேலை மிச்சம்? 

எத்தனை நூலகங்களுக்கு செல்வது? எத்தனை நூல்களை படிப்பது? எவ்வளவு நாளிதழ்களை பார்க்க வேண்டியுள்ளது? எத்தனை ஆண்டு செய்தித்தாள்களை படிக்க வேண்டும்? குடிஅரசிலிருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய வேலை? இதை நமக்கு யாராவது செய்து கொடுத்து விட்டால் எவ்வளவு எளிதாக இருக்கும்?

இந்தப் பணிக்காக தோழர் தளபதிராஜ் அவர்களுக்கு நமது திராவிட இயக்க சிந்தனையாளர்கள் அவ்வளவு பேரும் நன்றி சொல்ல வேண்டும்! அவ்வளவு பெரிய பணி இது.

ஒரு அற்புதமான, மிகத் தேவையான ஒரு ஆய்வு நூலை, நம்முடைய எதிரி களுக்கு பதில் சொல்லக்கூடிய ஒரு பெரும் ஆயுதத்தை, நம்முடைய கையில் கொடுத்திருப்பதற்காக தோழர் தளபதி ராஜ் அவர்களுக்கு பாராட்டுதலை தெரி வித்துக் கொள்கிறேன்.

இதைப்பற்றி பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி! இதற்கு வாய்ப் பளித்த பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் திற்கு மிக்க நன்றி என குறிப்பிட்டார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலை வர் சோம.இளங்கோவன் தனது உரையில் இந்த நூல் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவர வேண்டும் என குறிப்பிட்டார்.

நூல் ஆசிரியர் தளபதிராஜ் ஏற்புரை வழங்க, எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment