'நீட்' விலக்கு - ஒன்றிய அரசுக்கு விளக்கம் தரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

'நீட்' விலக்கு - ஒன்றிய அரசுக்கு விளக்கம் தரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை 21 நீட் விலக்கு மசோதா தொடர்பான ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு, உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட உணவுக்கூடம், மருத்துவ மாணவர் களுக்கான திறன் ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.7.2022) திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 10,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள், சிகிச்சைகள் செய்யப்பட்டதை முன் னிட்டு, இதயவியல் துறை மருத்து வர்களை கவுரவித்ததுடன், இதய நோய் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியையும் பார்வையிட்டார்.

முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கை, கால் இழந்த 6 பேருக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பிலான செயற்கை கை, கால்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர்ஆர்.பிரியா, ராயபுரம் சட்டமன்ற உறுப் பினர் அய்ட்ரீம் மூர்த்தி, சுகாதாரத் துறைச்செயலர் ப.செந்தில்குமார், மருத் துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, கோவை கங்கா மருத்துவமனை இயக்குநர் ராஜசபாபதி, சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா, மண்டலத் தலைவர் இராமலு, கவுன்சிலர் கீதாசுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது: நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். ஆளுநர் வழியாக தமிழ்நாடு சட்டத் துறைக்கு, ஒன்றிய அரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

நீட் தேர்வு, தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று ஒன்றிய அரசு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், தேசிய கல்விக் கொள் கைக்கு முரணாக உள்ளதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்வி களுக்கு விரிவான பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம். மாநில அரசு களுக்கு அதிகாரம் உள்ளது என் பதையும் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசுக்கு பதில் அனுப்பப்படும்.

அதேபோல, நீட் தேர்வின் பாதிப் புகள் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு. சட்ட வல்லுநர்களின் ஆலோ சனையுடன் தயாரான பதிலுக்கு, முதல மைச்சரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment