என்ன செய்யப் போகிறீர்கள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

என்ன செய்யப் போகிறீர்கள்?

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற் காக அல்லும் பகலும் இடையறாது பாடுபட்டு வரும் ‘விடுதலை’ தினசரியை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? 

என்ன செய்யப் போகிறீர்கள்?

தேசத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பார்ப்பனர் செய்து வரும் சூழ்ச்சியையும். அக்கிரமங்களையும் அச்ச மின்றி வெளியாக்கி வரும் ‘விடுதலை’யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டு விடப் போகிறீர்களா? 

என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடு கிறோம் என்று கூறிக் கொண்டு முஸ்லிம்களை அடிமையாக்கச் செய்யும் காங்கிரஸ்காரர்களின் சூழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி வரும் ‘விடுதலை’யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டு விடப் போகிறீர்களா? 

என்ன செய்யப் போகிறீர்கள்?

தீண்டாமையை ஒழிக்கப் போகிறோம் என்று கூறி தீண்டாதார் முன்னேற்றத்தை தடுக்க செய்யும் அக்கிரமங்களை அஞ்சாது வெளியாக்கும் ‘விடுதலை’யை ஆத ரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? 

என்ன செய்யப் போகிறீர்கள்?

பார்ப்பனரல்லாத, முஸ்லிம், ஆதி திராவிட தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மற்றவர்களைப் போல் அரசியலில் முன்னேற்றமடைய வேண்டுமானால் உங்களுக்காகப் பாடு படும் விடுதலையை ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள். அதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். ‘விடுதலை’ வீழ்ச்சியுறுமானால், நீங்கள் வீழ்ச்சியுறு வீர்கள். ஆகையால் உடனே 'விடுதலை'க்கு சந்தாதாரராகச் சேருங்கள்.

சந்தா விகிதம்:

தபால் மூலம் முன் பணமாக மாதம் ஒன்றுக்கு 0-11-0 6 மாதத்திற்கு 4-0-0 ஒரு வருடத்திற்கு 7-8-0 விலாசம்: மானேஜர் ‘விடுதலை’ ஈரோடு

(குடிஅரசு 14.11,1937 பக்கம்-9)


No comments:

Post a Comment