தமிழ்நாட்டில் மீனவர் மாதிரி கிராமம் நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

தமிழ்நாட்டில் மீனவர் மாதிரி கிராமம் நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

புதுடில்லி,ஜூலை.25 தமிழ்நாட்டில் மீனவர் மாதிரி கிராமம் அமைக்க ஒன்றிய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பி யுள்ளார். 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆ-ம் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணவீக்கம், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, போன்ற பல்வேறு பிரச் சினைகள் குறித்த கேள்விகளை நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி முழக்கமிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாட்டில் மீனவர்கள் மாதிரி கிராமத்தை ஏற்படுத்தும் உத் தேசம் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளதா, மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் நல்வாழ்வுக்கு எத்தகைய உதவிகள் செய்யப்பட்டன என்ற கேள் விகளை அவையின் முன் வைத்தர். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத் துறை அமைச்சர் பர்சோட்டம் ரூபாலா, மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3000அய் ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக கொடுத்து வருகிறது. இதன் மூலம் 8,12,195 மீனவர் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் பிரதமரின் மீனவர் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து மீனவர் மாதிரி கிராமத்தை ஏற்படுத்துவதற்கு எந்த உத்தேசத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 2021--_2022ஆம் ஆண்டில் 1.70 லட்சம் பேர் தமிழ்நாட்டில் பயன டைந்து வருகின்றனர். இதற்கான மொத்த செலவினம் ரூ.7650 கோடி யாகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2550 கோடியாகும் என்று எழுத் துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.


No comments:

Post a Comment