இதய ரத்தநாள அடைப்பை போக்க உதவும் புதிய லேசர் தொழில்நுட்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

இதய ரத்தநாள அடைப்பை போக்க உதவும் புதிய லேசர் தொழில்நுட்பம்

சென்னை, ஜூலை 7 ஆஞ்சியோபிளாஸ்டி  செய்துகொள்ளும் இதய நோயாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் வகையில் சமீபத்திய எக்ஸைமர் லேசர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த தலைமுறைக்கான பிஎல்எஸ் சாதனம் என்று இதனை அழைக்கிறார்கள்.  சென்னை அப்பல்லோ பிரதான மருத்துவமனையின் இதயநோய் நிபுணர்கள் டாக்டர். கே. தாமோதரன் மற்றும் அவரது குழுவினர் இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பாதிக்கப்பட்ட  53 வயதுப் பெண்ணுக்கு முதன்முறையாக எக்சைமர் லேசர் சாதனத்தை கொண்டு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை மேற்கொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற இதய சிகிச்சை நிபுணர்கள் அமைப்பின் (தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கார்டிலாஜிஸ்ட் அசோசியேஷன் டிஅய்சி 2022)   தமிழ்நாடு அளவிலான மாநாட்டின் போது இந்த தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்ட  இத்தகைய சிகிச்சை  நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

இந்த எக்ஸைமர் லேசர் சிகிச்சையானது ஒளி வேதியியல், ஃபோட்டோதெர்மல் மற்றும் ஃபோட்டோமெக்கானிக்கல் விளைவுகளின் கொள்கையின் மூலம் மிகவும் சிக்கலான அதிரோஸ்கிளிரோடிக் அடைப்புகளை அகற்றவும்,  சம்பந்தப்பட்ட தமனிக்கு செல்லும் குழாய்களில் அடைப்புகளை அகற்றவும் பயன்படும்.

எக்ஸைமர் லேசர் அமைப்பு 308 நானோமீட்டர்களின் குறிப்பிட்ட அலைநீளத்துடன் கூடிய குளிர்ந்த புற ஊதா ஒளியை வெளியிடுகிறது. லேசரின் ஊடுருவலின் ஆழம் 50 மைக்ரான்கள் மட்டுமே (ஒரு மனித முடியின் அகலம்) எனவே இதயத்திற்கு செல்லும் குழாய்களில் ஏற்படும்  அடைப்பை நீக்க பயன்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.


No comments:

Post a Comment