புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள் - மூன்று நூல்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள் - மூன்று நூல்கள் வெளியீடு

சென்னை, ஜூலை 19  பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு அவர்கள் தொகுத்த பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள் -மூன்று நூல்களின் (குயிலோசை, குயிலின் கூவல், பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள்)வெளியீட்டு விழா 17.7.2022 அன்று சென்னை 'தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கில் 'நடைபெற்றது.

பேராசிரியர் முனைவர் வேலம்மாள் இளவரசு முன்னிலை வகித்தார். முனைவர் கு. திருமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்  முனைவர் இ. சு. சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். தமிழ் இலெமூரியா 'இதழாசிரியர்  சு. குமணராசன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.  கோ. மணிவாசகம்,  முனைவர் இரா. இளவரசு எழுதிய நூல்களின் மின்னுருவாக்கப்படியை வெளியிட்டு அறிமுக உரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்.

முனைவர் பி. தமிழகன் 'குயிலோசை 'நூலை வெளியிட்டு ஆய்வுரை நிகழ்த்தினார்.  பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி நூலைப் பெற்றுக்கொண்டார்.

தமிழியக்க இணைச் செயலர் முனைவர் மு. இளமுருகன் 'குயிலின் கூவல்' என்னும் நூலை வெளியிட,  பேராசிரியர் நன்னன் அறக்கட்டளை நிறு வனருமான  வேண்மாள் செம்மல் பெற்றுக் கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழகதின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வீ. அரசு,' பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள்'என்னும் நூலை வெளியிட  மருத்துவர் அன்பு கவுதமன் பெற்றுக் கொண்டார்.விழாவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரர்கள்  கோ. செல்வம்,  கோ. பாரதி ஆகியோர் சிறப்பிக்கப் பெற்றனர். விழாவில் பேராசிரியர்  ஓவியன், அன்பு மற்றும்  முனைவர் இரா.இளவரசுவின் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர்,தமிழ் உணர்வாளர்கள் -ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.   


No comments:

Post a Comment