இலங்கையின் அலங்கோலம்: பதவி விலகினார் பிரதமர் ரணில்; தப்பியோடினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

இலங்கையின் அலங்கோலம்: பதவி விலகினார் பிரதமர் ரணில்; தப்பியோடினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

கொழும்பு, ஜூலை 10 இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் கொதிநிலை அடைந்து அதிபர் மாளிகைக்குள் ஆவே சத்தோடு மக்கள் நுழைந்தனர். கோத்தபய ராஜபக்சே ஓட்டம் பிடித்தார். 

அண்டை நாடான இலங்கை, 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அள வுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக் கித்தவித்து வருகிறது. மக்கள்  இலங்கையின் இந்த நிலைமைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி  -அவர்கள் பதவி விலகக்கோரி பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அய்க்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே மே 12 ஆம் தேதி பதவிக்கு வந்தார். 

பிரதமர் மாறினாலும், காட்சி மாற வில்லை. மாறாக நாளுக்கு நாள் நிலைமை மோசமானது.  பதவி விலகல் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே பிடிவாதமாக இருந்து வந்தார். வெளிநாட்டு செலாவணி கையிருப்பு கரைந்த நிலைமை, அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலை உயர்வு, பல மணி நேர தொடர் மின்வெட்டு, பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு, அரசு எந்திரம் முடக்கம் என தொடர் சிக்கலில் சிக்கி இலங்கை தொடர்ந்து தவித்து வந்தது. 

இந்த சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஜூலை 9 ஆம்  தேதியும், 10 ஆம் தேதியும் (நேற்றும், இன்றும்) பெருமளவில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டங்கள் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் அழைப்பு விடுத்தன. இதற்கிடையே நாட் டின் முன்னணி வழக்குரைஞர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பியதின் விளைவாக இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நேற்று (9.7.2022)  திரும்பப் பெறப் பட்டது.

அதிபர் மாளிகை பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக...

இந்த நிலையில் கொழும்பு நகரில் கோட்டைப்பகுதியில் பலத்த பாதுகாப்புடன் கூடிய இலங்கை அதிபரின் அதிகாரபூர்வ மாளிகை முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமென திரண்டனர். இந்த அதிகாரபூர்வ மாளிகையைத்தான் கோத்த பய ராஜபக்சே தனது வசிப்பிடமாகவும், அலுவலகமாகவும் கொண்டு செயல்பட்டு வந்தார். மக்கள் கிளர்ச்சியால் அதிபர் மாளிகை பகுதி பதற்றம் நிறைந்த பகுதி யாகக் காணப்பட்டது.

போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் இலங்கையின் தேசிய கொடிகளை ஏந்தி வந்து போர்க்கோலம் பூண்டனர். கோத்த பய ராஜபக்சே பதவி விலகக்கோரி முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை முழங்கினர். அதிபர் மாளிகை பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்தனர். அப்போது அவர் களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக் காரர்களை விரட்டியடிக்க ராணுவத்தினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதில் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆனால், அத்தனையையும் மீறி அதிபர் மாளிகைக்குள் ஒரே நேரத்தில் மக்கள் நுழைந்தனர். அந்த மாளிகையை தங்கள் வசமாக்கி சூறையாடினர். அதிபர் மாளிகையில் அதிபர் கோத்தபய ராஜ பக்சேவோ, அவரது குடும்பத்தினரோ இல்லை. அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டனர் என தெரிய வந்துள்ளது. 

மக்கள் கிளர்ச்சி வெடித்து, அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற் றுகையிடப் போகிறார்கள் என கிடைத்த உளவுத் துறையினரின் தகவலால் 'உஷார்' அடைந்து அவர்கள் முன் எச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். 

அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், அவரது குடும்பத்தினரும் எங்கே ஓட்டம் பிடித்தனர் என்பது குறித்து தற்போது வரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. 

அதே நேரத்தில் கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஏறி அதிபரும், குடும்பத்தினரும், வெளி நாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாக நம்பப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், மிக முக்கிய தலைவர்களுக்கான வாகன அணிவகுப்பு பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கி அணிவகுத்த காட்சிகளை கொண்ட காணொலி சமூக ஊடகங்களில் வெளி யாகியது. 

சமூக ஊடகங்களில் வெளியாகி....

ஆனால், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எல்.என்.எஸ். சிந்துரலா மற்றும் எஸ்.எல்.என்.எஸ். கஜ பாகு ஆகிய 2 போர்க் கப்பல்களில் சிலர் ஏறியதாகவும், அவர்கள் அதிபரும், அவரது குடும்பத்தினராகவும் இருக்கலாம் என்றும், காரில் இருந்து அவசர, அவசரமாக 3 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டதாகவும் தக வல்கள் வெளியாகின. அவற்றைக் காட் டுகிற காணொலியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


No comments:

Post a Comment