மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வீழ்ச்சியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வீழ்ச்சியும்!

சைவமும் வைணவமும் எழுச்சி பெற்ற காலத்தில், மன்னர்களும் தங்களின் புகழ் பரவவேண்டும் என்று ஆசைப்பட்டு மக்களை வதைத்து வரிவிதித்து மிகப் பெரிய கோவில்களையும், ஆலயங்களை யும் கட்டி குடமுழுக்கு செய்தார்கள்,

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயி லின் அழகை கண்டு வியந்த ராஜராஜ சோழன் அதைப் போலவே அழகிய பெரிய கோயிலை கட்டினார் என்பது வரலாறு. தஞ்சை பெரியகோயிலின் விமானம் முழு வதும் தங்கத் தகடுளால் வேயப்பட்ட பொற் கோயிலாக இருந்ததாகவும் பிற்காலத்தில் மாலிக்காபூர் என்னும் முகலாய மன்னன் படையெடுத்து கோயில் மண்டபத்தின் மேல்பகுதியை சிதைத்து கோபுரத்தின் தங்கத் தகடுகளை பெயர்த்தெடுத்து கொள் ளையடித்துச் சென்றதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார் கள். இதைப்போல சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூரையும் பொன்னால் வேயப் பட்டுள்ளது. சீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமலிங்கசாமி கோயில், ஆவுடையார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருப் பாதிருப்புலியூர் பாடலீசுவரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தாராசுரம் அய்ராவதீஸ்வரர் கோயில், தென்காசி விசுவநாதர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை ஜலகண்டேசு வரர் கோயில், போன்ற மிகப்பிரம்மாண் டமான கோயில்கள் தவிர ஆயிரக்கணக் கான பெரிய கோயில்களும் சிறிய கோயில் களும், தமிழ்நாட்டிலே மன்னராட்சி காலத் தில் கட்டப்பட்டன. அவற்றுக்கு இன்று வரை குடமுழுக்கு கும்பாபிஷேகம் செய்து பராமரித்து தேரோட்டம் திருவிழா நடத்தி வருகிறோம்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத் திலே பெரிய கோயில்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை என்று தொ. பரமசிவம் எழுதிய “சமயங்களின் அரசியல்” என்னும் நூலிலே குறிப்பிடுகின்றார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் மன்னர்கள் கோயில்களை கட்டினார்கள். ஆயிரக் கணக்கான கோயில்களை கட்டுவதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவு செய் திருப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவற்றை பராமரிக்கவும், பழு துபார்த்து கும்பாபிஷேகம் செய்யவும், திருவிழாக்கள் நடத்தவும் எத்தனை ஆயி ரம் கோடி செலவு செய்யப்பட்டிருக்கும், நினைத்து பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. இவைகளுக்கு செலவுசெய்த பணத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஆக்கபூர்வமான கல்விச்சாலைகள் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், நீர் தேக்கங்கள் அமைத்து விவசாயம் தழைக் கவும், தொழில் வளர்ச்சி பெருகவும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெரு கவும், மக்களைப் பற்றி சிந்தித்து மன்னர்கள் செயல்பட்டிருந்தால் உலகப்பணக்கார நாடுகளின் முன்வரிசையில் நாம் இருந்து இருக்கலாம் என்று சொன்னால் அது மிகையல்ல. நமது நாடு பொருளாதாரம் விஞ்ஞானம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியதற்கு காரணம் ஆரியர்களின் சூழ்ச்சியும், நிர்வாகத்திறனற்ற மன்னர்க ளின் ஆட்சியும் தான். நாமறிந்த வரையில் மைசூர் மகாராஜா கிருஷ்ணதேவராயரும், சோழமன்னன் காரிகாலன் இருவரும்தான் தீர்க்கமாக சிந்தித்து நீர்தேக்கங்களை கட்டி இன்று வரை இரண்டு மாநில மக்களும் விவசாயம் செய்து வளமாக வாழ வழிவகை செய்தார்கள். மற்ற மன்னர்களெல்லாம் கோயில் வழிபாட்டிலும், சங்கீதம், நாட்டி யம், நாடகம், அந்தப்புரத்திலே அழகிக ளோடு சல்லாபம் செய்வதிலே பொழுதை கழித்தார்கள். போர் நடத்தி மக்களின் பொருளாதாரத்தை சீரழித்தார்கள். மன்னர் களின் கொட்டத்தை வெள்ளைக்காரர்கள் அடக்கினர்கள். மக்கள் அடிமையாக்கப் பட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள் வியாபாரத்தை வளர்க்க வர்த்த கம் செய்ய வந்தார்கள். நாட்டை ஆண் டார்கள். அதற்காக மொகலாய மன்னர்கள் படையெடுப்பு நடத்தி கோயில்களைக் கொள்ளையடித்தார்கள், அரண்மனை கஜானாவை காலி செய்தார்கள்.

வெள்ளைக்காரனும், பிரெஞ்சுக்கா ரனும், மொகலாயனும் நம்நாட்டு மக்களை சித்ரவதைசெய்து வளங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றபோது இரண்டா யிரம் ஆண்டுகளாக நாம் நம்பி வணங்கி வந்த ஆரியர்களும், ஆண்டவர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள், ஆரி யர்கள் ஒளிந்து கொண்டார்கள், ஆண்ட வர்கள் கல்லாக நின்றார்கள், மீண்டும் சாமானிய மக்கள் போராடினார்கள். சுதந் திரம் பெற்றார்கள் மக்களாட்சி மலர்ந்தது. நாடு வளர்ந்தது. இன்று மீண்டும் ஆரியர்கள் இந்துத்துவா கோஷத்தை சொல்லி இராமர் கோயில் கட்டுவதும், அதற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் திட்ட மதிப்பீடு செய்வதும், இதைப்போலவே நாடு முழு வதும் புதிது புதிதாக கோயில்கள் கட்டு வதும், பொற்கோவில் கட்டுவதும் மீண்டும் ஆயிரமாண்டு பின்னோக்கி செல்வதும் அறிவுடைமையாகாது. இயற்கையை பாதுக்காப்பதோடு, அறிவார்ந்த ஆக்க பூர்வமான திட்டங்களை நிறைவேற்றினால் தான் மக்கள் நலம்பெறுவர். இதுவரை மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்ட கோயில்களே ஏராளம். இதற்குமேல் புதி தாக கோயில்கள் கட்ட அவசியமில்லை. ஆன்மீகவாதிகள் இருக்கின்ற கோயில் களை நன்கு பராமரித்து வழிபடுவதோடு உள்ளத்தை தூய்மை செய்து நற்சிந்தனை, நல்லெண்ணம், நற்செயல்புரிந்து தீயவை களை விட்டொழித்து வாழ்வதே நாட்டுக் கும், வீட்டுக்கும் நல்ல சமுதாயம் அமைவ தற்கும் வழிவகுக்கும் என்பதே அறிவுடை மையாகும்.

பக்தர் வேடம் போட்டு, சிலைகளைக் கடத்துவதும், கோயில் நகைகளை கொள் ளையடிப்பதும், பாமர மக்களை ஏய்த்து பணம் பறிப்பதும் ஆன்மீகமுமல்ல அதை நம்புவது அறிவுடமையுமல்ல.

No comments:

Post a Comment