கற்றவரை பின் தொடருங்கள்... ஆசிரியர்களும்... மாணாக்கர்களும்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

கற்றவரை பின் தொடருங்கள்... ஆசிரியர்களும்... மாணாக்கர்களும்...

கரும்பலகையில் ‘1000’ என்று எழுதி விட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?’’ என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வி யின் எளிமையைக் கண்டு சற்று அவமான மாக உணர்ந்து, ‘’ஓராயிரம்,’’ என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

“பத்தாயிரம்,” என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் ‘010000’ எழு திவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

“அதே பத்தாயிரம்“ என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, “ஒரு முக் கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின் தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந் தால், பதில் உனக்கே தெரியும் என்று முடித் தார்.... முக்கியத்துவத்தையும், மரியாதை யையும், சகிப்புத் தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனி தனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்....

கற்றவரை பின் தொடருங்கள்... வாழ் வின் அர்த்தம் விளங்கும்.

நன்றி: ஜிசிசி ஞிவீரீமீst, 

விணீஹ் 2022 பக்கம் 88


No comments:

Post a Comment