மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகிதங்களால் நாளை முதல் விலைவாசி மேலும் உயர்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகிதங்களால் நாளை முதல் விலைவாசி மேலும் உயர்கிறது!

புதுதில்லி, ஜூலை 17 - ஜூலை 18 முதல் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலுக்கு வருவதால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களின் விலைகள் கடுமையாக உயரவுள்ளன.  

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி சண்டிகரில் 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்  டம் நடைபெற்றது.  இதில், பல்வேறு பொருட்கள் மற்றும்  சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப் பட்டது. இதுவரை விலக்கு அளிக்கப்பட்டிருந்த சரக்குகள், சேவைகளுக்கும் புதிதாக வரி விதிக்கப்பட்டது.

இவ்வாறு புதிதாக விதிக்கப்பட்ட மற்றும்  உயர்த்தப்பட்ட பொருட்கள் - சேவைகளுக் கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் ஜூலை 18 முதல் அமலுக்கு வருகின்றன. இதனால் நாளை (திங்கட் கிழமை) முதல் பல்வேறு  சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு நுகர்வோர் அதிக விலை அல்லது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. லீகல் மெட்ராலஜி (Legal Metrology)  சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன் கூட்டியே லேபிளிடப்பட்ட இறைச்சி, மீன், பால், தயிர், மோர், பனீர் மற்றும்  லஸ்ஸி போன்ற சில்லரைப் பொருட் களுக்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்பட வில்லை. ஆனால்,  47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் இவற்றுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால், இந்தப் பொருட்களின் விலைகள் உயர உள்ளன.  பால் நிறுவனமான அமுல் இந்த பொருட்களின் விலையை மாற்றியமைக்கலாம் என்று தக வல்கள் வெளியாகியுள்ளன. வணிகப் பெயரில் (பிராண்ட்) அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் முதன்முதலாக 5 சதவிகித ஜிஎஸ்டி-யை மோடி  அரசு விதித்துள்ளதால், இவற்றின் விலை களும் ஜூலை 18 முதல் உயர்கின்றன. எல்இடி விளக்குகள், எல்இடி சாதனங்கள்  ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ள தால், இந்தப் பொருட்களின் விலை களும் உயரவுள்ளன.


No comments:

Post a Comment