குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள்: திரவுபதி முர்மு வெற்றி: தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள்: திரவுபதி முர்மு வெற்றி: தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

புதுடில்லி, ஜூலை 22  குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (வயது 64) வெற்றி பெற்றார். அவர் 64 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்தன.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மேனாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேனாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கூட்டணியில் இடம்பெறாத பல் வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரி வித்தன.

கடந்த 18 ஆம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடை பெற்றது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் 771 எம்.பி.க்களும், 4,025 எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர். ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவாகின.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதி வான வாக்குகள் டில்லியில் நேற்று (21.7.2022) எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எம்.பி.க்களின் வாக்குகளும், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் வாக்குகளும் எண்ணப்பட்டன. இறுதியில், திரவுபதி முர்முவுக்கு ஒட்டுமொத்தமாக 2,824 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,877 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. சின்ஹா 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். திரவுபதி முர்மு நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2 ஆவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரும் 25 ஆம் தேதி அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மாண்புமிகு திரவுபதி முர்மு அவர் களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணை நின்று துடிப்பு மிகுந்த அர சமைப்பின்பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். - இவ்வாறு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment