தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு

உடுமலை, ஜூலை 13  தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகள் மூலம் இதுவரை இல்லாத வகையில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தலா 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துசாதனை படைத் துள்ளதாக காற்றாலை உரிமையா ளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 35 சதவீதமாக உள்ளது. நாட்டில் மொத்த முள்ள 25,000 காற்றாலை களில் தமிழ்நாட்டில் மட்டும் 12,000 காற்றாலைகள் உள்ளன. தமிழ் நாட்டில் கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு தொடர்ந்து 7-வது நாளாக காற் றாலைகள் மூலம் தினமும் 100 மில் லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி யாகியுள்ளது.

கடந்த 9ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 120.25 மில்லியன் யூனிட் உற்பத்தியானதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள் ளார். தமிழ்நாட்டில் வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக் கும். 6 மாதங்களில் அதிகளவு காற் றாலை மின்சாரம் உற்பத்தியாகும். கடந்த சில நாட்களாக இரவில் அதிக வேகத்துடன் காற்று வீசுவ தால் காற்றாலைகளின் இயக்கம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரிரங்கையன் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் கோவை, திருப் பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் அதிக அளவில் காற்றா லைகள் உள்ளன.

ஜூலை 3ஆம் தேதி 103.96 மில் லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி யானது. 4ஆம் தேதி 106.91, 5ஆம் தேதி 111.13, 6ஆம் தேதி 101.71, 8ஆம் தேதி 107.76, 9ஆம் தேதி 120.25 மில்லியன் யூனிட் என இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 10ஆம் தேதி 100 மில்லியன் யூனிட் அளவை கடந்துள்ளது. 

ஜூலை 9ஆம் தேதி அன்றைய தமிழ்நாட்டின் மின் நுகர்வு அளவான 340.399 மில்லியன் யூனிட்டில், காற்றாலை யின் பங்கு35 சதவீதம் ஆகும்.

ஆடி மாதத்தில் இன்னும் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனால் காற்றாலை மின் உற்பத்தி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் காற்றாலை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மரபு சாரா எரிசக்தி துறையின் உடுமலை செயற்பொறி யாளர் ஜெயப்பிரகாஷ் கூறும்போது, “தமிழ்நாட்டில் 8,518 மெகாவாட் உற்பத்தி திறனுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதில் உடுமலை காரிடருக் குட்பட்ட பகுதி களில் மட்டும் 3,894.6 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 4,698 காற்றாலைகள் நிறுவப்பட்டு, அதில் மே மாதம் முதல் சுமார் 4,500 காற்றாலைகள் இயங்குகின்றன” என்றார்.


No comments:

Post a Comment