திருப்பூர் யூனியன் வங்கி ஓ.பி.சி. ஊழியர் நலச்சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தந்தை பெரியார் படம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

திருப்பூர் யூனியன் வங்கி ஓ.பி.சி. ஊழியர் நலச்சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தந்தை பெரியார் படம் திறப்பு

திருப்பூர், ஜூலை 11- திருப்பூரில் யூனியன் வங்கி ஓபிசி ஊழியர் நல சங்கத்தின் தமிழ் நாடு மாநில 27ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி கூட்டம் தொடங்கியது.

நமது யூனியன் வங்கி ஓபிசி ஊழியர் நல சங்கத்தின் தமிழ்நாடு மாநில 27ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஜி.ஜி. ஓட்டலில் 9.7.2022 சனிக் கிழமை அன்று நடைபெற்றது, இதில் நமது நல வங்கியின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் இருந்து ஓபிசி பிரதிநிதிகள் 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னை மண்டல ஓபிசி பிரிவி னருக்கான தனி தொடர்பு அதிகாரியும், துணைப் பொதுமேலாளருமான நி.முரு கன், ரஞ்சித் சுவாமிநாதன், தலைவர் கோவை பிராந்தியம், வி.செந்தில் குமார், தலைவர் திருப்பூர் பிராந்தியம், சுதிர் கோஜெண்டி, தலைவர், திருச்சி மண் டலம், ஏ.பாலசுப்ரமணியன், உதவி பொது மேலாளர், மிட் கார்ப்பரேட், திருப்பூர், டி.முருகானந்தம், உதவி பொது மேலாளர், திருப்பூர் மெயின், எம்.பாக்யராஜ், பொதுச் செயலாளர், அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி சங்கம், எஸ்.அழகேசன், பொதுச்செயலாளர், பொதுக் காப்பீடு (நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்) ஓபிசி சங்கம், அய்.சிறீராம், அகில இந்திய கனரா வங்கி ஓபிசி சங்கத் தலைவர் ஆகியோருக்கு நல சங்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப் பட்டது. 

வங்கியின் உயர் நிர்வாகிகள் நல சங்கத்தின் செயல்பாட்டுக்கு பாராட்டு

பொதுக்குழு கூட்டத்தை, சென்னை மண்டல ஓபிசி பிரிவினருக்கான தனி தொடர்பு அதிகாரியும், துணைப் பொது மேலாளருமான நி.முருகன் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்: ரஞ்சித் சுவாமிநாதன், தலைவர் கோவை மண்டலம், வி.செந்தில் குமார், தலைவர் திருப்பூர் மண்டலம், சுதிர் கோஜெண்டி, தலைவர், திருச்சி மண்டலம், ஏ.பால சுப்ரமணியன், உதவி பொது மேலாளர், மிட் கார்ப்பரேட், திருப்பூர், டி.முரு கானந்தம், உதவி பொது மேலாளர், திருப்பூர் மெயின், எம்.பாக்யராஜ், பொதுச் செயலாளர், அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி சங்கம், எஸ்.அழகேசன், பொதுச்செயலாளர், பொதுக் காப்பீடு (நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்) ஓபிசி சங்கம், அய்.ஸ்ரீராம், அகில இந்திய கனரா வங்கி ஓபிசி சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நல சங்கத்தின் தலைவர் கோ.கரு ணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன் வரவேற்றார். திருப்பூர் மண்டல செயலாளர் டி.பார்த் திபன் நன்றி கூறினார். ஓபிசி மகளிர் பிரிவின் ஆலோசகரும் தலைவருமான திருமதி ஞா.மலர்க்கொடி மற்றும் பொரு ளாளர் ஜி.சரஸ்வதி ஆகியோர் விழா நிகழ்வை தொகுத்து வழங்கினர்.

பணி நிறைவு பெற்ற தோழர்களுக்கு பாராட்டு

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஜி.பழனிக் குமார், துணைத் தலைவர், எம்.பழனிசாமி, முதன்மை மேலாளர், சேலம் பிராந்தியம், ஆகியோர் விழாவில் சிறப்பு செய்யப் பட்டனர்.

ஓபிசி நிர்வாகிகளுக்கு பாராட்டு

விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததுடன் தங்குதல், உணவு, அரங்க அமைப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் திரு.த.பார்த்திபன் தலைமையிலான நமது திருப்பூர் ஓபிசி குழுவினர் திருவாளர்கள்: பிரபு, கார்த்திக் (திண்டுக்கல்), கார்த்திக் (மார்க்கம்பட்டி), கார்த்திக் (திருப்பூர்), வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பாக செய்தனர். விழாவில் அவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஓபிசி பெண்கள் அணியின் கலந்துரையாடல்

இறுதியாக, யூனியன் வங்கி ஓபிசி சங்கம், தமிழ்நாடு அணியின் ஓபிசி பெண்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. பெண் பணியாளர்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து, ஞா.மலர்க்கொடி தலைமையில், ஜி.ராஜகவிதா, டி.சுப்பு லட்சுமி, டி.நளினி, ராணி, ரம்யா, சுந்தர மீனாட்சி, சுஜாதா ஆகியோர் பேசினர்.

இது ஒரு அற்புதமான அமர்வு, நமது ஓபிசி சங்கத்தில் இதுபோன்ற முதல் அமர்வு, நமது பிரதிநிதிகள் அனை வரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. கூட்டத்தில் பெண் ஊழியர்களின் பங்கேற்பைப் பாராட்டிய நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி, பெண்கள் அணிக்கு அனைத்து ஆதரவையும்  நல சங்கம் அளிக்கும் என உறுதியளித்தார்.

தந்தை பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற நூல் அங் கிருந்த அனைத்து பெண் தோழர் களுக்கும் வழங்கப்பட்டது. தந்தை பெரி யாரின் சிந்தனைகள் சிறுவர்களையும் ஈர்க்கிறது.


No comments:

Post a Comment