உலகில் முதல் குளோனிங் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

உலகில் முதல் குளோனிங்

(ஆண் பெண் உயிரினக் கலப்பில்லாமல் ஆய்வுக்கூடத்தில் உயிர்களை உருவாக்கும் முறை) 

ஆடு டோலி உருவாகிய நாள் இன்று

1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச் சிக் கூடத்தில் முதன் முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறை யில் பிறந்தது.

டோலியை உருவாக்குவதற்கு, 277 கருமுட்டைகள் தேவைப்பட்டன. 278ஆவது கருமுட்டையினால் தான், டோலி பிறந்தது. சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் சினைப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட், செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார். இந்த ஆட்டுக்கு பெற்றோர், மூவர் உள்ளனர். மரபணுக் கருக்கள் கொடுத்த இரு ஆடுகளும், தன் சினைப்பையில் வளர்த்த மற்றொரு ஆடும் சேர்ந்து மூன்று பெற்றோர் ஆகின்றனர்.

வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சாதனை படைத்த டோலி ஆறரை ஆண்டுகள் கழித்து, 2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இறந்து போனது.

இறந்தாலும் ஆராய்ச்சிக்கு உதவிய டோலி

முதலில் டோலிக்கு மூட்டுவலி நோய் தாக்கம் ஏற்பட்டது. பின்பு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. எனினும், இதன் பால்மடிகளில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு, உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இந்த திசுக்களை பயன்படுத்தி 14 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஆடுகள் உருவாக்கப்பட்டன. டோலியை உருவாக்குவதற்கு தலா 277 கருமுட்டைகள் தேவைப்பட்டாலும், புதிய ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் தலா அய்ந்து முட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்த முறையை பின்பற்றி பிற்காலங்களில் பன்றி, ஆடு, குதிரை, நாய் மற்றும் பூனை போன்ற உயிரினங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment