குறைகளை தெரிவிக்க "ஆசிரியர்கள் மனசு" புகார் பெட்டி கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

குறைகளை தெரிவிக்க "ஆசிரியர்கள் மனசு" புகார் பெட்டி கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சோமனூர், ஜூலை 27 குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீடு, அலுவலகத்தில் ‘ஆசிரியர்கள் மனசு’ என்ற புகார் பெட்டி வைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.கோவை மாவட்டம் அரசூர் கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற மாநில அளவில் கல்வியாளர்களுக்கான ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களை போற்று வோம் என்ற தலைப்பில் ஆசிரியர் களுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்களுக்கு கல்வி என்ற தன்னம்பிக்கை விதைக்க வேண்டும். காமராஜரைப் போல இருக்க வேண் டும் என்பதை விட, அவர் குறிக் கோளைத் தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் 38 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளி யிலும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வரும். அவற்றை தீர்க்கவே பாடுபட்டு வருகி றோம். எப்போதும் தங்கள் குழந்தை களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமைகள் உள்ளன. ஒரு குழந்தை எடுக்கக்கூடிய முடிவு அனைத்து மாணவர்களையும் பாதிக் கின்றது. ஆசிரியர்களும், பெற்றோர் களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகள் எடுக்கக்கூடிய மதிப் பெண்கள் மட்டுமே அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்காது. படிப் பறிவுடன் பகுத்தறியும் சிந்தனையுடன் சமுதாயத்தின் நன்மை தீமைகளை அறிந்து செயல்பட வேண்டும். ஆசிரி யர்கள் சிற்பிகள். மாணவர்களை சிற் பங்களாக வடித்து அவர்கள் வளர்ச் சிக்காக என்றென்றும் கல்வித் துறை ஒத்துழைப்பாக இருக்கும். ஆசிரியர் களுக்கு மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுடைய பிரச் சினைகள் தீர்த்து வைக்கப்படும். ஆசிரியர்கள் கோரிக் கைகளை என்னை நேரடியாக சந்தித்து கூறும் சிரமத்தை தவிர்க்க ‘ஆசிரியர்கள் மனசு’ என்ற புகார் பெட்டியை எனது அலுவலகம் மற்றும் வீட்டில் வைக்க உள்ளேன். விரைவில் இணைய வழி மூலம் மாணவர்களின் குறைகள் குறித்து கேட்டு அறிவதற்கான வழிவகை செய்யப்படும். அறிவார்ந்த சமுதா யத்தை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை, பொறுப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment