படகு பழுதால் இலங்கை மீனவர்களை காப்பாற்றிய ராமேஸ்வரம் மீனவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

படகு பழுதால் இலங்கை மீனவர்களை காப்பாற்றிய ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம், ஜூலை 18 படகு பழுதானதால் உயிருக்கு போராடிய 2 இலங்கை மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கச்சத் தீவில் இறக்கி விட்டனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 16.7.2022 அன்று 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு படகில் இருந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இலங்கை படகு ஒன்று கடலில் நிலைதடுமாறிக் கொண் டிருந்ததைக் கவனித்தனர். அந்த படகில் இருந்தவர்கள் கைகளை தூக்கி உதவி கேட்டுள்ளனர். இதனை பார்த்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை படகின் அருகில் சென்று பார்த்தபோது, படகு பழுதாகி மூழ்கும் நிலையில் இருந்தது தெரிந்தது. அதிலிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றிக் கொண்டனர். மூன் றாவது நபர் இறந்துவிட்டதால் படகி லேயே விட்டு விட்டனர். இரண்டு இலங்கை மீனவர்களுக்கும் தண்ணீர், உணவு கொடுத்து உதவினர். மீட்கப் பட்ட மீனவர்களிடம் கேட்டபோது, இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், ஜனார்த்தனன் என்று தெரிவித்தனர். இருவரையும் கச்சத்தீவு கடலோர பகுதியில்  இறக்கி விட்டனர். கரை திரும்பிய மீனவர்கள் கூறும்போது, 

‘‘மீட்கப்பட்ட இலங்கை மீனவர் களை விடுவதற்காக தலை மன்னாருக்கு சென்றால் இலங்கை கடற்படையினர் எங்களை கைது செய்வார்கள். ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்தால் இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் இரு வரையும் கைது செய்வார்கள். ஆகை யால் கச்சத்தீவு கடலோர பகுதியில் இறக்கிவிட்டோம். அவர்கள் தீவின் கடற்கரைக்கு சென்றடைந்து எங்க ளுக்கு கையசைத்து உறுதி செய்தபின் திரும்பினோம்’’ என்றனர். படகிலேயே இறந்த மட்டக்களப்பு மீனவர் ராயமூர்த்தி (52) உடல் மன்னார் பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டது.


No comments:

Post a Comment