முதுகு கூனலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு புத்தாக்க தொழில்நுட்பத்தில் அறுவைச் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

முதுகு கூனலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு புத்தாக்க தொழில்நுட்பத்தில் அறுவைச் சிகிச்சை

சென்னை, ஜூலை 7 சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனல்  (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது. 

டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா  என்ற 15 வயது எத்தியோப்பிய இளைஞருக்கு கடுமையான முதுகு கூனல் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மார்புப் பகுதியின் மேல்புற முதுகுத்தண்டில் 110 உருக்குலைவு / ஊனம் இருந்த இந்நிலையில், முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையில், “அனகோண்டா ஸ்பைன்” என அழைக்கப்படுகிறது. கால்பந்தாட்ட வீரராக அவ்விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இந்த இளைஞனுக்கு இந்த முதுகுத்தண்டு சீர்குலைவு அவனது கனவை சாதிக்கவிடாமல் ஒரு தடையாக இருந்தது. இதை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சை, சிம்ஸ் மருத்துவமனையின் ஏசியன் ஆர்த்தோபெட்டிக் இன்ஸ்டியூட்-ன் முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

இச்சிகிச்சைக்குப் பிறகு திறன்கொண்ட மருத்துவ குழுவினர் அறுவைசிகிச்சையின்போது, மூளை நரம்பியல் கண்காணிப்பு நிபுணர் ஆகியோரின் உதவியோடு உயர் செயல்திறனுள்ள அறுவைச் சிகிச்சை இந்நோயாளிக்கு செய்யப்பட்டது. மருத்துவமனையிலேயே கிடைக்கக்கூடிய 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட, அறுவைசிகிச்சைக்கு முந்தைய முதுகுத்தண்டு மாதிரி, அறுவைசிகிச்சை செயல்முறைக்கு உதவியது.


No comments:

Post a Comment