கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி

 சென்னை, ஜூலை 22 சோனாலிகா அய்.டி.எல். நிறுவனம் தனது பணியாளர்களாக திறமை மிக்க இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அய்.டி.அய். மற்றும் இதற்கு சமமான கல்வி மய்யங்களில் படித்த 3000 இளைஞர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. இவர்களை இந்தியா முழுவதும் உள்ள தமது விற்பனையகங்களில் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ளவர்களுடன் கூடுதலாக இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

 அய்.டி.அய். பயின்ற இளைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய இணையதள முகவரி:  <https://www.sonalika.com/hiring.html>

இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து  இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர்  ரமன் மிட்டல் கூறுகையில், “இந்தியாவில் திறன் மிக்க இளைஞர்கள், பட்டதாரிகள் மாநில அளவில் அதிலும் குறிப்பாக அய்.டி.அய். மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயின்றவர்கள் அதிகம் உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும்  திறமை மிக்கவர்கள் நமக்குக் கிடைக்கின்றனர். இத்தகைய இளைஞர்கள் மிகவும் புத்தாக்க சிந்தனை கொண்டவர்களாகவும் தங்களது தொழில்நுட்ப அறிவை முழுமையாக செயல்படுத்தி தங்களது திறனை நிரூபிக்கத் தயாராகவும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment