கலைஞர் நினைவு நாள்: பன்னாட்டு மாரத்தான் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

கலைஞர் நினைவு நாள்: பன்னாட்டு மாரத்தான் போட்டி

சென்னை, ஜூலை 22 கலைஞர் நினைவுநாள் பன்னாட்டு மாரத்தான் போட்டி 3ஆவது ஆண்டாகசென்னையில் வரும் ஆகஸ்ட் 7ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மேனாள் முதலமைச்சர் கலைஞர் மறைவை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. முழு மார்த்தான் போட்டி, அரை மாத்தான் போட்டி, 10 கி.மீ. போட்டி, 5 கி.மீ. போட்டி என4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

கலைஞர் நினைவு மண்டபம் எதிரிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புவர்கள் www.kalaignarmarathon.com  என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அமர்ஜித்சிங் சாவ்லா இப்போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளார். அவர் தன்னைப்போல் பலரும் இப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு மாரத்தான்போட்டிக்காக வசூலிக்கப்படும் முன்பதிவு கட்டணம் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment