கற்க, கற்க! கற்பதை கைவிடாதீர் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

கற்க, கற்க! கற்பதை கைவிடாதீர் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, ஜூலை 6 மாநிலக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று (5.7.2022) நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். 

விழாவில் பேசிய முதலமைச்சர் இந்த கல்லூரியின் மேனாள் மாணவர் என்னும் வகையில் தான் பெருமை கொள்வதாக தெரிவித்தார். அதனுடன் தனது கல்லூரி நாட்களை அவர் நினைவுகூர்ந்தார்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்," மிசா காலத்தில் சிறையில் இருந்த போது காவல்துறையினரின் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன். அறிவு, வளர்ச்சியை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநிலக் கல்லூரி திகழ்கிறது. 

கல்வியை கடல் என கூறுவார்கள் அந்த கடலுக்கு எதிரில் இருக்க கூடிய கல்லூரி மாநில கல்லூரி. நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப் படைகிறேன். 

இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்னும் அடிப்படையில்  உங்கள் அனைவரையும் வாழ்த்து கிறேன்" என்றார்.

ஒரு டிகிரி போதும்னு நினைக்காதீங்க

சமூக நீதியின் லட்சியமே அனை வரும் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெறுவதை உறுதி செய்வதுதான் எனப் பேசிய மு.க.ஸ்டாலின், "படியுங்கள். பட்டம் பெறுங்கள். 

ஒரு பட்டம் பெற் றால் போதும் என நினைக்காதீர்கள். பெண்கள் மிகுதியாக கல்வி பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். யாராலும் திருட 

முடியாத ஒரே சொத்து கல்வி தான்" என்றார்.

நன்றாக படிக்கும் மாணவிகள் திருமணத்திற்கு பிறகு, படிப்பை நிறுத்திவிடக்கூடாது என வலியுறுத்திய மு.க.ஸ்டாலின், கல்வியை தாண்டி தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவற்றை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். மாநில கல் லூரிக்கு சிறப்பு திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அப் போது, "2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரியில் அமைக்கப் படும்.  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை உதயநிதியும், தயாநிதியும் அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி அமைத்து தரப்படும்" என்றார்.

பொன்முடி அல்ல அறிவுமுடி!

இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தமிழ் நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள்

எத்தனை பட்டங்கள் வாங்கி இருக்கிறார் தெரியுமா? 

சட்டப் படிப்பு, 

எம்.ஏ. வரலாறு 

எம்.ஏ அரசியல் அறிவியல், 

எம்.ஏ. பொதுத்துறை நிர்வாகம் ஆக இப்படி பல பட்டங்களைப் பெற்றவர். அது மட்டுமல்ல. அதைத் தாண்டி, அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கலைஞர் கூட அடிக்கடி அவரை சொல்கிறபோது பொன்முடி என்று சொல்ல மாட்டார். அறிவுமுடி என்று தான் கூப்பிடுவார் பாசத்தோடு. அந்த அளவுக்கு ஆற்றலைப் பெற்றவர். எந்த அவையாக இருந்தாலும். எந்தப் பொருளாக இருந்தாலும். அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி அவர்கள். கல்லூரிப் பேராசிரியராக இருந்து, இன்று பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார் என்றால். இதற்குக் காரணம் அவரது கல்வித் திறனும் அறிவாற்றலும்தான். 


No comments:

Post a Comment