குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இரு சித்தாந்தங்களுக்கிடையிலானதே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இரு சித்தாந்தங்களுக்கிடையிலானதே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா

அகமதாபாத், ஜூலை 15 - குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளவரான யஷ்வந்த் சின்கா நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலை வர்களையும் எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வருகிறார். 

குஜராத்   காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச்    சந்தித்து ஆதரவு  கோரினார்.  

அப்போது அவர் பேசுகையில், "இப்போராட்டம் (குடியரசு தலைவர்  தேர்தல்)  மிகப்பெரிய போராக  மாறியுள்ளது.  இதில், குடியரசுத்  தலைவராகத்  தேர்ந் தெடுக்கப்படுபவர்  (அது  யாராக இருந்தாலும்  சரி)  அரசமைப்பைக்  காப்பாற்ற  தனது  உரிமைகளை  பயன்படுத்துவாரா  என்ற கேள்வி  முக்கியமாக  எழுந்துள்ளது. ஆனால், ஒரு ‘ரப்பர் ஸ்டாம்ப்’  தலைவர்  அதை  (அரசமைப்பைக்  காப்பாற்றுவதை) ஒருபோதும்  செய்ய  முயற்சிக்க மாட்டார்  என்பது  வெளிப்படையானது. இன்று அரசியலமைப்பு விழுமி யங்களும்,  பத்திரிகைகள் உள்பட ஜனநாயக  அமைப்புகளும்  ஆபத்தில்  உள்ளன.

நாட்டில்  தற்போது அறிவிக் கப்படாத  'எமர்ஜென்சி' நிலவு கிறது.  எல்.கே.அத்வானியும்,  அடல்பிகாரி  வாஜ்பாயும் ஒரு     காலத்தில்     (1975-_1977) எமர்ஜென் சிக்கு எதிராக போராடி சிறைக்குச்  சென்றனர்.  இன்று அவர்களது  சொந்த  கட்சியே (பா.ஜ.க.)  நாட்டில்  நெருக்கடி நிலையைக்  கொண்டு  வந்துள்ளது. இது கேலிக் கூத்தானது. 

பிரதமரோ, உள்துறை அமைச் சரோ ஒரு வார்த்தைகூட பேச வில்லை! 

இரண்டு  கொலைகள்  (நுபுர் சர்மா  விவகாரத்தில்)  நடந்தன. நான் உள்பட அனைவரும் கண்டித்தோம்.    ஆனால்    பிரத மரோ (மோடி),    உள்துறை  அமைச்சரோ (அமித்ஷா) ஒரு  வார்த்தை கூட பேசவில்லை.  வாக்குகளை  பெறுவதற்காக  இது  போன்ற  பிரச்சினைகளை  உயிர்ப்புடன்  வைத்திருக்க  விரும்புவதால்  அவர்கள் அமைதி யாக  இருக்கிறார்கள். பழங்குடி  பிரிவைச்  சேர்ந்த ஒருவர்  (முர்மு)  நாட்டின்  உயர் பதவியைப்  பெறுவதால்  இந்தியாவில்  உள்ள  பழங்குடி  சமூகங்களின்   வாழ்க்கையை மாற்ற முடியாது.  யார்  எந்த  ஜாதி,    மதத்தில்  இருந்து  வந்தவர்  என்பது முக்கிய மில்லை.    யார் எந்த சித்தாந்தத்தை  பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்     என்பதுதான் முக்கியம்.  அவர்  (முர்மு)  ஜார்க் கண்ட்  மாநில  ஆளுநராக    6 ஆண்டுகள்  இருந்த போதிலும், அங்குள்ள  பழங்குடி  மக்களின் வாழ்க்கை மாறவில்லை. எனவே, தற்போது  நடப்பது,  இரு  வேறு சித்தாந்தங்களுக்கு  இடையே நடக்கும் போராட் டமே.

-இவ்வாறு  யஷ்வந்த்  சின்கா பேசியுள்ளார். 


No comments:

Post a Comment