காவிரி நீர் பகிர்வை முறைப்படுத்துக! ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

காவிரி நீர் பகிர்வை முறைப்படுத்துக! ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 24 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக் குறைவாக இருக்கும் ஆண்டு களில் தண்ணீர் பகிர்வு குறித்த நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கோரப் பட்டது.

மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட 16-ஆவது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணை யத்தின் கூட்டம்  டில்லி பிகாஜி காமா அலுவலக் கட்டடத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் சவுமித்ர குமார் ஹல்தார் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஆணைய உறுப்பினர்களான நவீன் 

குமார் (சி.ட்பியு.சி), ஒன்றிய வேளாண்மை துறை இணைச் செயலர் கோபால் லால் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்த கூட்டத்தில் ஆணை யத்தின் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடுநீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்ஸேனா, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகி யோர் கலந்துகொண்டார். கருநாடகம் சார்பில் அம்மாநில நீர்வளத் துறை செயலர்  ராகேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் (பொதுப் பணித்துறை செயலர் டாக்டர் டி. அருண்) காணொலி வாயி லாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆணையத்தின் அலுவலகக் கட்டடங்கள், பணி யாளர்கள் நியமனம் போன்ற நிர்வாக ரீதியான விவகாரங்கள் குறித்த ஆலோசனைகள் முத லில் இடம் பெற்றது. மற்ற முக்கிய ஆலோசனைகளில் நிகழ் ஆண்டின் மழையளவு, நீரியல் விவர தரவுகள் போன் றவை பகிர்ந்து கொள்ளப் பட்டது. தற்போது தமிழ் நாட்டிற்கு போதிய நீர் காவிரியில் திறந்து விடப்படுவதால் கருநாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீர் குறித்து பேச்சுகள் எழவில்லை. ஆனால் தமிழ்நாடுஉறுப்பினரும் நீர்வளத்துறை செயலருமான சந்தீப் சக்ஸேனா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்திருக்கும் ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வு குறித்த நடை முறைகளை ஆணையம் முறைப் படுத்த வேண்டிய நடவடிக் கைகளை வலியுறுத்தினார்.

பின்னர் இதற்கு தேவையான நடைமுறைகளை உரிய காலக் கெடுவுடன் முறையான வழியில் ஆணையம் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் கூட் டத்தில் பேசப்பட்டது. 

மேலும், பிலிகுண்டுலு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் வரத்து நீர் வெளியேற்றம் போன்றவைகளை நிகழ்நேர அடிப்படையில் உடனுக்குடன் தெரியவருவதற்கான நடைமுறைகள் குறித்த ஏற் பாடுகள் குறித்தும் கூட்டத் தில் பேசப்பட்டது. உச்சநீதி மன்றத்தில் வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி வழக்கு விசார ணைக்கு வரும் நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment