அரியலூர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு மூன்று பேருந்துகளில் செல்ல தருமபுரி கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

அரியலூர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு மூன்று பேருந்துகளில் செல்ல தருமபுரி கலந்துரையாடலில் முடிவு

தருமபுரி, ஜூலை 12 தரும புரியில் இருந்து ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் மாநில திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டிற்கு 3 பேருந் துகளில் 150-க்கும் மேற்பட்ட சீருடையுடன் இளைஞரணி  தோழர்கள் பங்கேற்க கலந் துரையாடலில் முடிவு செய் யப்பட்டது.

11.07.2022 அன்று மாலை 6.30 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநாட்டு பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், பேரணிக்கான இளைஞர்களை எவ்வாறு தயார் செய்வது, மாவட்டத்தி லிருந்து  அதிக அளவிலான இளைஞர்களை பங்குபெற செய்வது போன்ற மாநாட்டுக் கான பல்வேறு பணியின் திட்டங்களை வகுத்தளித்தார் மாநில அமைப்புச் செயலா ளர் ஊமை.ஜெயராமன் மேலும் மாநாட்டுக்கு நன் கொடையாக ரூபாய் 2000/- வழங்கி தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி,   ரூ. 2000/-

மாவட்ட செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன் ரூ. 2000/-

மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ண மூர்த்தி  ரூ.2000/-  ஆகியோர்  நன்கொடை வழங்கினர். மாநாடு நன்கொடை பணி சிறப்பாக நடைபெற இக்கூட் டத்தின் தீர்மானங்களாக:

1. மாநாட்டுக்கு 150 இளை ஞர்களோடு 3 பேருந்தில் சென்று மாநாட்டை சிறப் பிக்கவும்,

2.தருமபுரி மாவட்ட திரா விடர் கழகத்தின் அனைத்து அணியின் தலைவர், செய லாளர்,அமைப்பாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய நகர கிளை கழகப் பொறுப்பாளர்கள் மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 2000/- வழங்கி சிறப்பிக் குமாறும்,

3.பெருந்திரளாக இளை ஞர்களை மாநாட்டுக்கு பங்கு பெற செய்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் போன்ற திட்டங்கள் வகுக்கப் பட்டது.

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளர், ஊமை.ஜெயராமன், மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செய லாளர் பீம.தமிழ்பிரபாகரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.செல்லதுரை, மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ண மூர்த்தி, மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மேனாள் மாவட்ட செயலாளர் த.மு. யாழ் திலீபன், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் ச.பூபதி ராஜா, விவசாயணி ஊமை.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment