மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புத்திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புத்திட்டம்

சென்னை, ஜூலை 7 தென்னிந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனமாகிய - சென்னையைச் சேர்ந்த லான்கார் ஹோல்டிங்ஸ் லிமிடெட்  மூத்த குடிமக்களுக்கென ‘ஹார்மோனியா’  என்ற பெயரில் புதிய டவுன்ஷிப்பை உருவாக்கவுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அனைத்து தலைமுறையினரும் இடம்பெறும் வகையில் ‘புளு சர்க்கிள்’  என்னும் புதிய கான்செப்ட்டில் இந்த டவுன்ஷிப் வடிவமைக்கப்படவுள்ளது. இவை சிறீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் கட்டப்படும்.

மூத்த குடிமக்கள், அவர்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ ஏதுவான சூழல் இருக்கக்கூடிய வகையில் ‘புளூ சர்க்கிள்’ குடியிருப்புகள் அமையவுள்ளன. குறிப்பாக அவர்களது உடல் நலன், மகிழ்ச்சியான வாழ்க்கை, இளைய தலைமுறை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுடன் உற்சாகமாக இணைந்து வாழ்வது போன்ற சூழலில் இது உருவாக்கப்படும்.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  வி.கே. அசோக் இது குறித்து கூறுகையில், “மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகளை வடிவமைப்பதில் நிலவும் இடைவெளியைக் கருத்தில் கொண்டு ‘புளூ சர்க்கிள்’ குடியிருப்புகளை இந்நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. மூத்த குடிமக்களின் தேவையை உணர்ந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன என்றார்

No comments:

Post a Comment