விடுமுறை விவகாரம்: 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

விடுமுறை விவகாரம்: 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது

 சென்னை, ஜூலை 22   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி யில் மாணவி இறந்த விவகாரத்தில், போராட்டக் காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத் தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் கடந்த 17ஆம் தேதி அறிவித்தது. இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளி களுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக் கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து கடந்த 18-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. 

இதனையடுத்து அரசின் அனுமதியின்றி தன்னிச் சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் அனுமதியின்றி விடுமுறை அறிவித்த விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் 18ஆம் தேதி விடுப்பு (வேலை நிறுத்தம்) அறிவித்த தற்கு பதிலாக ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment