தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் 5,689 மெகாவாட் மின் உற்பத்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் 5,689 மெகாவாட் மின் உற்பத்தி!

சென்னை, ஜூலை26- தமிழ் நாட்டில் உள்ள காற்றா லைகள் மூலம் ஒரேநாளில் அதிகபட்ச மாக 5,689 மெகா வாட் மின்சாரம் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகள் 2.33 கோடி; வணிக மின்இணைப்புகள் 36 லட்சம்; தொழிற்சாலை மின்இணைப்புகள் 7 லட்சம்; விவசாயமின் இணைப்புகள் 22 லட்சம்; குடிசை மின் இணைப்புகள் லட்சம்; இதர இனம் 14 லட் சம் என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின் இணைப் புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வருகிறது.

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் 4,320 மெகாவாட்; எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் 516மெகாவாட்; காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் 8,615 மெகாவாட்; சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் 5,303 மெகாவாட் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒன்றிய தொகுப் பில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. மேலும் மின்சாரம் அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் தனியாரிடம் இருந்தும் கொள் முதல் செய்யப்படுகிறது. இவ் வாறுள்ள மின் உற்பத்தி முறைகளில் காற்றாலை களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழ் நாட்டை  பொறுத்தவரை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப் பூர் ஆகிய இடங்களில் 8,615.22 மெகாவாட் அள வில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மின் உற்பத்தி யும் அதிகமாக இருக்கும். இதற்கு இத்தகைய காலக் கட்டத்தில் பருவக்காற்று வீசுவதால், அப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதே காரணம். அந்த வகையில் தற்போது காற்றின் வீச்சு சம்பந்தப்பட்ட பகுதி களில் அதிகமாக இருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் உற் பத்தி செய்யப்படும் மின்சா ரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 3ஆம் தேதி அதிகபட்சமாக 5,689 மெகாவாட்மின்சாரம், தமிழ்நாட்டில் உள்ள காற் றாலைகளில் இருந்து உற் பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காற் றாலை மின்உற்பத்தியாளர் களிடம் இருந்து முழுவது மாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படாததால் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றஞ் சாட்டி வந்தனர். ஆனால் நடப்பாண்டில் நிலக்கரி தட் டுப்பாடு காரணமாக பல் வேறு மாநிலங்களில் மின்விநி யோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அனைத்து மாநி லங்களும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவை யான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

இதுபோல் தமிழ்நாடு அரசும் ஒரு புறம் மின் உற் பத்தியை அதிகரிக்க நட வடிக்கை எடுத்து வந்தது. மேலும் காற்றாலைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக வாங்கி பயன்படுத்தியது. தனக்கு தேவையானது போக மீதம் உள்ளதை மின்பரி மாற்றத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இதனால் நடப்பாண்டில் அதிக அளவு காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது காற்றாலை மின் உற் பத்தியாளர்களுக்கு அதிக வருவாயை கொடுத்துள்ளது..


No comments:

Post a Comment